Tamil - Study

Showing 25–38 of 38 results

Show Grid/List of >5/50/All>>
  • கடவுள் கற்பனையே

    கடவுள் கற்பனையே

    120.00
    Add to cart Buy now

    கடவுள் கற்பனையே

    .
     

    புரட்சிகர மனித வரலாறு


    ஏ எஸ் கே

     

    ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

    ரூ120

    120.00
  • உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

    உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

    220.00
    Add to cart Buy now

    உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

    .
     

    சமூக அரசியல் கட்டுரைகள்

     

    ஜெயராணி

     

    சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத்தவிர, உண்மையான தேசப்பற்று வேறு என்னவாக இருக்கமுடியும்?

    ரூ220

    220.00
  • எதிர்க் கடவுளின் சொந்த தேசம்

    எதிர்க் கடவுளின் சொந்த தேசம்

    180.00
    Add to cart Buy now

    எதிர்க் கடவுளின் சொந்த தேசம்

    .

    ஏ வி  சக்திதரன்

     

    கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு

     

     

    ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத்தப்பட்டு ராம்லீலா கொண்டாடப்படுவது. இங்கே வேறொரு புள்ளியில் இணைகின்றது மகிசாசுர மர்த்தினி கதை. தசரா கர்நாடகத்து வாசிப்பு என்றால் துர்கா பூஜை வங்காளத்து வாசிப்பு.

    சக்திதரனின் நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் தேர்ச்சிமிக்கதுமான இந்நூல், கேரளத்தின் சிக்கலான சமூகத்தை வடிவமைக்கும் நம்பிக்கையமைப்புகளை விசாரித்தறிய, தொன்மவியல்- வரலாறு, பொருளியல் – இலக்கியத்தை ஒன்றிணைக்கிறது.

     

    தமிழில் : சா  தேவதாஸ்

    Kerala brahmin / Kerala Parppan

    ரூ180

    180.00
  • உண்மை ராமாயணத்தின் தேடல் 

    உண்மை ராமாயணத்தின் தேடல் 

    230.00
    Add to cart Buy now

    உண்மை ராமாயணத்தின் தேடல் 

    .

    ஜி என்  நாகராஜ்

     

    உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆசியாவின் பல நாடுகளில் அவர்களும் இராமனின் பிறப்பிடம் என்று அடையாளம் கண்டுகொண்ட இடங்கள் பல உள்ளன. இங்கே போற்றப்பட்ட ஒரு கதை உலகம் முழுவதும் பரவியது எப்படி? ஆணுக்கொரு இராமாயணமிருந்தால், பெண்ணிற்கென தனியொரு இராமாயணம் இருக்கிறது. குழந்தைகள் இராமாயணத்தை தங்கள் கண்கள் வழியாக மீண்டும் படைத்திருக்கிறார்கள். ஆளுபவனுக்கு ஒரு இராமாயணமிருந்தால், உழுபவனின் இராமாயணம் சொல்வதே வேறு. நாட்டுப்புற இராமாயணத்தைப் படித்தவர்கள் ஒழுங்கான இராமாயணத்தை படித்தால் அங்கே இருப்பதே வேறு.

    தமிழில் : கே  நல்லதம்பி

    ரூ230

    230.00
  • மதங்களும் சில விவாதங்களும் 

    மதங்களும் சில விவாதங்களும் 

    250.00
    Add to cart Buy now

    மதங்களும் சில விவாதங்களும் 

    .
     
    தருமி
    மத நம்பிக்கைகள்  பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள்
    சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’
    வழியே பார்த்துத்தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே ‘பாவம்’ என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது
    வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது
    ‘நம்பிக்கைகள்’ பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின்  மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.
    இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை,வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞர்களுக்கேஉரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.
    ரூ250
    250.00
  • கடவுள் என்னும் மாயை

    கடவுள் என்னும் மாயை

    399.00
    Add to cart Buy now

    கடவுள் என்னும் மாயை

    .
     
    தருமி
    மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக  மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.
    14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறித்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டுபட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்றுகுவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.
    மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும்,  சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால், கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது.
     
    ரூ399
    399.00
  • இந்தியா ஏமாற்றப்படுகிறது

    இந்தியா ஏமாற்றப்படுகிறது

    320.00
    Add to cart Buy now

    இந்தியா ஏமாற்றப்படுகிறது

    .

    தொகுப்பு
    பிரதீக் சின்ஹா / டாக்ட ர் சுமையா ஷேக் / அர்ஜூன் சித்தார்த்

     

    அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன.

    “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.

    தமிழில் : இ பா  சிந்தன்
    ரூ320
    320.00
  • பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

    பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

    350.00
    Add to cart Buy now

    பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

    .

    .

    ரொமிலா தாப்பர்

     

    பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்
    உடனிகழ்காலக் கடந்த காலங்கள்

    மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பண்பாட்டு கருத்தமைவு குறித்த வரையறைகள் எப்படி மாறியுள்ளன என்று விளக்கி, கூடுதல் கவனம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் தாப்பர். கடந்த காலத்தின் சிந்தனைகள் மற்றும் தேர்ந்தெடுத்த இனங்களால் பண்பாடுகள் வரையறுக்கப்படுகையில், ஒருசில தவிர்த்து ஒப்பீட்டளவில் அறியப்படாதவனவாகவே உள்ளன. இருப்பினும் கடந்த காலத்துடன் தொடர்பு படுத்துவதிலும் உடனிகழ்கால இருப்பு என்றவகையில் அவற்றின் முக்கியத்துவத்திலும், ஒவ்வொன்றும் ஒரு சூழலையும் அர்த்தத்தையும் பெற்றுள்ளன. பண்பாட்டுடன் தொடர்பற்றதாகப் பெரிதும் கருதப்படும் சூழல்கள், எதிரான வகையில் தெளிவுப்படுத்தக் கூடியனவாக இருக்க முடியும். பண்பாடுகளை அடையாளப்படுத்தும் பொருட்களிலிருந்து, சமூகப் பாகுபாடு, பெண்களின் பாத்திரம், அறிவியல் – அறிவின்பாலான அணுகுமுறைகள் போன்ற பண்பாடுகளை வடிவமைக்கும் கருத்துகள் வரை இவற்றில் சிலவற்றை தாப்பர் தொட்டுச் செல்கிறார். சிந்தனையைத் தூண்டும் இதுபோன்ற புத்தகங்கள் விவாதத்தைக் கிளப்பும்; இந்தியாவின் பண்பாடு குறித்த நடப்பு மூட மரபுகள் சிலவற்றை ஓய்ந்துபோகச் செய்யும்.

     

    தமிழில் : சா  தேவதாஸ்

    ரூ350
    350.00
  • நான் நாத்திகன் ஏன் ?

    நான் நாத்திகன் ஏன் ?

    50.00
    Add to cart Buy now

    நான் நாத்திகன் ஏன் ?

    .
    .

    மாவீரன் பகத்சிங்

     

    ”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”

     

    தமிழில் : ப ஜீவானந்தம்

    Bhagath Singh Bahath Singh

    ரூ 50
    50.00
  • பெண் ஏன் அடிமையானாள்?

    பெண் ஏன் அடிமையானாள்?

    80.00
    Add to cart Buy now

    பெண் ஏன் அடிமையானாள்?

    .
    .
     

    பெரியார்

    ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

    Periyar / EVR / Thanthai Periyar 
    ரூ80
    80.00
  • ஆரியக்கூத்து

    ஆரியக்கூத்து

    100.00
    Add to cart Buy now

    ஆரியக்கூத்து

    .
    .

    அ மார்க்ஸ்

    கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர்.

    ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.

    ரூ100

    100.00
  • இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்

    இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்

    150.00
    Add to cart Buy now

    இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்

    .

    .

    சீனிவாச ராமாநுஜம்

     

    காந்தி தன்னை ‘இந்து’ என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் ‘நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார். ‘இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது’ என்கிறார் கோல்வால்கர். ‘இந்து நாகரிகத்தோடும் இந்து பண்பாட்டோடும் தொடர்புகொண்டிருப்பவர்களே இந்துக்கள்’ என்கிறார் சாவர்க்கர். ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்று சசி தரூர் விளக்குகிறார். ‘நான் ஏன் இந்து அல்ல’ என்று காஞ்சா அய்லய்யா விவரிக்கிறார். ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. ‘நான் ஏன் ஓர் இந்து பெண் அல்ல’ என்று வாதிடுகிறார் வந்தனா சோனால்கர். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்து மதத்தை ஒழிக்காமல் சாதிகளை ஒழிக்க முடியாது’ என்கிறார்கள் அம்பேத்கரும் பெரியாரும். அதேசமயத்தில், ‘இந்து என்ற தொகுப்பு காலனியர்களால் உருவாக்கப்பட்டது’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி, பல கோடி மக்கள் தங்களை ‘இந்து’ என்று பதிவுசெய்கிறார்கள். மதச்சார்பின்மைவாதிகள், ‘நாங்கள் இந்து அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்களே தவிர இந்து மதத்துக்கு அல்ல’ என்கிறார்கள். ‘இந்து என்ற கருத்தாக்கம் ஒரு வாழ்க்கைமுறை’ என்கிறது உச்ச நீதிமன்றம். உண்மையில், யார் இந்துவாக வாழ்கிறார்கள்? இந்து என்ற கருத்தாக்கத்தை இந்தப் புத்தகம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது!

    Indu matham oru visaranai –  Sreenivasa Ramanujam – RSS 

    ரூ150

    150.00
  • வரலாற்றில் பிராமண நீக்கம் இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்

    வரலாற்றில் பிராமண நீக்கம் இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்

    550.00
    Add to cart Buy now

    வரலாற்றில் பிராமண நீக்கம் இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்

    .
    .
    .

     ப்ரஜ் ரஞ்சன் மணி

     

     

    வரலாற்றில் பிராமண நீக்கம்… இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்-

    அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’. – கெய்ல் ஓம்வெட்

    முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு… மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது. – உமா சக்ரவர்த்தி

    இந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும். – மெயின்ஸ்ட்ரீம்

     தமிழில் : க பூரணச்சந்திரன்
    ரூ550
    550.00
  • ஆதி இந்தியர்கள்

    ஆதி இந்தியர்கள்

    399.00
    Add to cart Buy now

    ஆதி இந்தியர்கள்

    ஆதி இந்தியர்கள்
    டோனி ஜோசஃப்

     

    இந்தியர்களாகிய நாம் யார்?
    நாம் எங்கிருந்து வந்தோம்?

    நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, கடும் சவால்களின் ஊடே முதன்முதலாக இந்தியாவை வந்தடைந்ததிலிருந்து அக்கதை தொடங்கிறது. அதற்குப் பிறகு, கி.மு. 7000க்கும் கி.மு. 3000க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஈரானிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் இங்கு வந்து குடியேறுகின்றனர். பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இங்கு நுழைகின்றனர்.

    தொல்லியல், மரபியல், வரலாறு, மொழியியல், கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், டோனி ஜோசஃப் நம்முடைய கடந்தகாலத்தைப் படிப்படியாகத் திரைவிலக்கும்போது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய, மிகவும் சர்ச்சைக்குள்ளான, அசௌகரியமான பல கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார். அவற்றில் சில:

    • சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார்?

    • ஆரியர்கள் உண்மையிலேயே வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்களா?

    • மரபியல்ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா?

    மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல், நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடனும் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு, நாம் யார் என்பது குறித்த மறுக்க முடியாத முக்கியமான உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது. அந்த உண்மை இதுதான்:
    நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தாம்!

    நாம் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

     

    எழுத்தாளர் பற்றி:

    ‘பிசினஸ் வேர்ல்டு’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான டோனி ஜோசஃப், முன்னணி தினசரிகள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இந்தியாவின் தொல்வரலாறு குறித்து வலுவான தாக்கம் ஏற்படுத்தியுள்ள பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.

    Awards received by this book:
    • Best non-fiction books of the decade (2010-2019) – The Hindu
    • Book of the Year Award (non-fiction), Tata Literature Live, 2019 – The Wire
    • Shakti Bhatt First Book Prize 2019 – The Indian Express
    • Atta Galatta Award for best Non-Fiction, 2019 – Deccan Herald
    • One of the 10 Best New Prehistory Books To Read In 2020, as identified by Book Authority

    Tony Joseph / Athi Indiayarkal / Indiyar / Adi Dravidar / Adi Indiyarkal

    பக்கங்கள் 284  விலை ரூ 399

    399.00