Tamil - Biography
Showing all 13 results
-
பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [1]
₹350.00 Add to cartபெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [1]
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 1
தந்தை பெரியார்
இந்நூல் சமதர்மமும் நாஸ்திகமும், பகுத்தறிவும் நாஸ்திகமும், பகுத்தறிவை அடிமைப்படுத்தும் மதம், பகுத்தறிவு சங்கம், (சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி), விபூதியின் பெருமை (சைவாகமத்தில் உள்ளது), பகுத்தறிவைச் செலவு செய்யக் கூடாதா? யோசித்து பாவம் என்ற கட்டுப்பாட்டால்தான் நாம் கீழ் நிலையுற்றோம், சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம், பகுத்தறிவை வளர்க்க படிப்பகங்கள் தேவை, மாணவர்களும் பகுத்தறிவும் (பகுத்தறிவும், புரட்சியும்), பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துக்கள் கொண்டதே இராமாயணம், புரட்சிக்கரமான கலைகள் மிளிர வேண்டும், மூட்டாள்தனம் நம்மோடு போகட்டும் நம் சந்ததியாவது பகுத்தறிவுடன் வாழட்டும் போன்ற 54 தலைப்புகளையும் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு பற்றி பேசிய எழுதிய கருத்துகளைக் கொண்ட நூலாகும்.
-
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / EV Ramasami
₹350.00 -
-
பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [2]
₹180.00 Add to cartபெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [2]
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 2
தந்தை பெரியார்
இந்நூல் பகுத்தறிவே நல்வழி காட்டி, நாமும் அடிகளாரும் சமுதாய நோய் தீர்க்கும் மருத்துவரே, அறிவு வழி ஆராய்ந்து நடப்பவனே நாத்திகன் – மனிதன், நான் பகுத்தறிவுவாதி. மக்களையும் சிந்திக்கச் செய்கிறேன், புத்தருக்குப் பின் எங்களைத் தவிர எவரும் அறிவு பிரச்சாரம் செய்ய தோன்றவில்லை, நம்பிக்கை வாதிகளை மறுத்து அறிவு வாதிகளாக வேண்டும், மற்றங்கள் வாழ்வில் அவசியமே, ஏழைகள் துயரம் நீங்க வழி, நாகரிகம் என்ற என்ன? புதிய கருத்துக்களை ஏற்க மறுத்து பகுத்தறிவை இழக்காதீர்!, எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும், மனிதனே சிந்தித்துப்பார்!, பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே, நான் செய்வது பகுத்தறிவுத் தொண்டே, இனிவரும் உலகத்தில் சமுதாயம் முன்னேற பகுத்தறிவு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், பகுத்தறிவுச் சுடர், பகுத்தறிவுக் கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா போன்ற 43 தலைப்புகளும் தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பகுத்தறிவு பற்றி பேசிய, எழுதிய கருத்துகள் அடங்கிய நூலாகும்.
-
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / Ramasami
₹180.00 -
-
பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [3]
₹210.00 Add to cartபெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [3]
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு-3
தந்தை பெரியார்
இந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா, கடவுள் வயது மூன்றாயிரமே, அய்ந்தறிவும் ஆறறிவும், சிந்திக்காதவன் மிருகமே, ஊர்தோறும் பகுத்தறிவாளர் கழகங்கள் தேவை, பகுத்தறிவு, பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை, பொங்கல் விழாவும் திராவிடர்களும், மூடநம்பிக்கைக்காரரை ஆசிரியராக்கினால், மின்சாரமும் மதமும், செருப்படி எதற்காக? உண்மை நாடுவோர் சங்கம், இறந்தவர்களுக்கச் செய்யப்படும் எதுவும் இறந்தவர்களுக்குச் சேராது, நாலுகடை விசாரிப்பது ஏன்? கடவுள்- மதத்தை குப்பைத் தொட்டியில் போடுங்கள், நீண்ட ஆயுளின் இரகசியம், மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும், காட்டுமிரண்ட்டி மத்தியில் கடிதைத் தொண்டு, முட்டாள்தனம் ஒழிந்தால் முன்னேற்றம், கோயிலுக்குச் செல்வோருக்கு கேள்வி, உலகின் ஒரே பகுத்தறிவு ஆட்சி இது!, பகுத்தறிவு வாதியின் முக்கிய வேலை, தந்தை பெரியார் பகுத்தறிவு விளக்கம், இன இழிவு ஒழிய, கடவுளை ஒதுக்குங்கள், பகுத்தறிவுவாதி யார்? மனிதர்கள் கழகம். போன்ற 92 தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய, எழுதிய கருத்துகள் தொகுப்புகள் கொண்ட நூலாகும்.
-
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / EV Ramasawami
₹210.00 -
-
பாலைவனப் பூ
₹400.00 Add to cartபாலைவனப் பூ
பாலைவனப் பூ
வாரிஸ் டைரி , காத்லின் மில்லர்
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….
பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.
தமிழில் : எஸ் அர்ஷியா
Palavana Poo / Palaivanappu
பக்கங்கள் 360 ரூ400₹400.00 -
ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
₹400.00 Add to cartஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி பிராங்க்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.தமிழில் : உஷாதரன்Anni Frankin Diary Kurippukal
ரூ400₹400.00 -
13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
₹220.00 Add to cart13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
ராம்சந்த்ரா சிங்
தமிழில் : இரா செந்தில்
தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன. – வரவர ராவ்
இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண்மைத்தன்மையும் உணர்ச்சிகளை உருக்கக்கூடியது. – கே.ஆர்.மீரா
இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று. – ஆனந்த் டெல்டும்டே
Naxal / Naxalismரூ: 220₹220.00 -
பயங்கரவாதி என புனையப்பட்டேன்
₹200.00 Add to cartபயங்கரவாதி என புனையப்பட்டேன்
பயங்கரவாதி என புனையப்பட்டேன்.பயங்கரவாதி என புனையப்பட்டேன்
மொகமது ஆமிர் கான் – நந்திதா ஹக்ஸர்
‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.’
‘நாடாளுமன்றத் தாக்குதல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதேபோல, எல்லா இசுலாமியர்களும் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன். அரசியலில் எனக்கு எப்போதுமே ஆர்வம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தியாவில் இசுலாமிய மக்களின் எதிர்காலம் குறித்த கேள்வி மனதில் எழுகிறது.நாங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படப் போகிறோமா?தமிழில் : அப்பணசாமிMohammad Aamir Khan / Nandita Haksar (Authors)ரூ200₹200.00 -
கடைசி முகலாயன்
₹899.00 Add to cartகடைசி முகலாயன்
.ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி 1857
வில்லியம் டேல்ரிம்பிள்வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை கடைசி முகலாயன் காட்டியிருக்கிறது. அரசர்களின் வறட்டுப் பட்டியலாக, போர்கள் மற்றும் உடன்படிக்கைகளாக அல்லாமல் கடந்தகாலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவர வேண்டும். நீண்டகாலத்திற்கு முன்னரே இறந்துவிட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும். அவர் நம்மிடையே வாழ்கிறார் என வாசகர்களை உணரவைக்க வேண்டும். அவர்களுடைய மகிழ்ச்சியை, வருத்தங்களை, கவலைகளை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். டேல்ரிம்பிளின் புத்தகம் ஆழமான உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. இது டெல்லிவாசிகள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்.
– குஷ்வந்த் சிங், அவுட்லுக் இந்தியா
தமிழில் : இரா செந்தில்
ரூ899
₹899.00 -
நான் செய்வதைச் செய்கிறேன்
₹399.00 Add to cartநான் செய்வதைச் செய்கிறேன்
.ரகுராம் ராஜன்
ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில் ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும், அவருடைய ஆழமான புலமையையும், துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. – C. ரங்கராஜன , முன்னாள் RBI ஆளுநர்
Raguram Rajan
தமிழில் : ச வின்சென்ட்
ரூ: 399₹399.00 -
பேரரசன் அசோகன்
₹550.00 Add to cartபேரரசன் அசோகன்
.சார்ல்ஸ் ஆலன்
கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு … இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.அசோகரது வரலாற்றை சார்ல்ஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து, மறைந்து போன மன்னனை மீட்டெடுக்கிறார்.
தமிழில் : தருமி
ரூ550
₹550.00 -
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
₹180.00 Add to cartஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
.ஏ எஸ் கே
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்மவெறியர்கள் எங்குப்பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.
ரூ180
₹180.00 -
நான் நாத்திகன் ஏன் ?
₹50.00 Add to cartநான் நாத்திகன் ஏன் ?
..மாவீரன் பகத்சிங்
”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”
தமிழில் : ப ஜீவானந்தம்
Bhagath Singh Bahath Singh
ரூ 50₹50.00 -
இந்துவாக நான் இருக்கமுடியாது
₹299.00 Add to cartஇந்துவாக நான் இருக்கமுடியாது
.பன்வர் மெக்வன்ஷி‘ஆர்எஸ்எஸ் – ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம்நீங்கிய, கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்’ – சசி தரூர்
‘இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல’ – பெருமாள் முருகன்
‘இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் ‘இந்துவாக நான் இருக்கமுடியாது’ நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும்’ – பென்யாமின்
‘நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்’ – பாலுலால் கண்டேலா
‘ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும்’ – டாக்டர் தாராராம் கௌதம்
‘சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்’ – அவினாஷ் விகாஸ் சர்மாHINDUVAKA NAN IRUKKA MUDIYATHU
தமிழில் : செ நடேசன்Banvar Mehvanshiபக்கங்கள் 304 ரூ299₹299.00