Tamil - Politics
Showing 1–24 of 26 results
-
பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம் 1-6]
₹395.00 Add to cartபெரியார் களஞ்சியம் – மதம் [பாகம் 1-6]
பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம்1-6]
தந்தை பெரியார்
இந்நூல் – மத விபரீதம், குருக்களின் புரட்டு, இந்து மத பிரசாரம், சன்மாக்கமும் துன்மார்க்கமும், இந்து மதங்களும் யாகங்களும், சமயம், சைவ சமயம், வருணாசிரம மாநாடு, இந்தியாவில் பார்ப்பனீயம், எது ஜீவகாருண்யம், மதமும் சீர்திருத்தமும் மூடப்பண்டிகைகள், சோதிடம், இஸ்லாமியமும் இந்து மதமும், சமரச சன்மார்க்கமும், ஆத்மா பற்றிய ஓர் ஆராய்ச்சி போன்ற 44 உட்தலைப்புகளில் மதம் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
இந்நூல் – கடவுள் கதை, கடவுளும் மனிதனும் கடவுள் மறுப்பும் கோவில் இருப்பும், கடவுள் இழிவு, மூடநம்பிக்கை, கடவுள் உண்டான காலம், கடவுள் அவதாரங்கள், கடவுள் பக்தி, இழிவை ஒழிக்க வழி, வளர்ச்சிக்கு வழி, பூசையால் விளையும் நாசம், அறிவுக்கு பொருந்தாத கடவுள், கோயில் ஒரு சுரண்டல் கருவி, கபட நாடகக் கடவுள், கடவுளின் திருவிளையாடல்கள், கடவுள் தர்பார், பகவான் சோதிக்கிறார், கோயில்கள் ஏற்பட்டது எப்படி? தத்துவ விளக்கம் போன்ற 79 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
இந்நூல் – இரு கிருஷ்ணர்கள், தருமம் என்பது என்ன?, செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள், கேரளா சீர்திருத்த மகாநாடு, மதமும் சாதியும், கோவில் கோபுரங்களின் ஆபாசங்கள், புத்தமதமும் சுயமரியாதையும், இந்து – முஸ்லிம், அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை, மத ஸ்தாபனங்கள், அக்ரகாரத்தில் மகாத்மா, மதக்கிறுக்கு, இஸ்லாம் மத ஒழுக்கம், இந்து முஸ்லீம் ஒற்றுமை, பார்ப்பனிய பிளேக்கை அழிக்க வேண்டும், போன்ற 52 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் கட்டுரைகளும் பேச்சுகளும் அடங்கியது.
இந்நூல் – ஆரிய மதவண்டவாளம், மேல்நாடும் கீழ்நாடும், எது உண்மை மதம், வர்ணாஸ்சிரமச் சாக்கடை, சைவ வைணவப் போட்டி , எது கடவுள்?, எது மதம்?, பார்வதி பரமசிவன் சாம்பாஷணை, நாயன்மார் முக்தி பெற்ற விதம், ராமனும் சீதையும் யோக்கியர்களா?, பழந்துனி கேட்கும் பரமன், சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம், சமுதாயத் துறையில் நமது நிலை, சிவராத்திரி பண்டிகையின் வண்டவாளம், வேதம் என்பது வெறும் வசைப்பாட்டுகளே போன்ற 58 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
₹395.00 -
பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]
₹780.00 Add to cartபெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]
பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]
பெரியார்
இந்நூல் – கடவுள், சாமியும் சமயமும், காந்தியும் கடவுளும், பிள்ளையார், பிரார்த்தனை, ஆரியர் கடவுள், எது நாஸ்திகம், பிள்ளையார் உடைப்பு கடவுள் யோக்கியதை, கடவுள் குழப்பம், கடவுள் என்பது ஒரு பொருளா? இந்து மதத்திற்கு கடவுள் உண்டா? கடவுளின் நாச வேலைகள் போன்ற 64 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
- வெளியீடு: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
- தொகுப்பாசிரியர்:கி. வீரமணி
₹780.00 -
பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [1]
₹350.00 Add to cartபெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [1]
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 1
தந்தை பெரியார்
இந்நூல் சமதர்மமும் நாஸ்திகமும், பகுத்தறிவும் நாஸ்திகமும், பகுத்தறிவை அடிமைப்படுத்தும் மதம், பகுத்தறிவு சங்கம், (சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி), விபூதியின் பெருமை (சைவாகமத்தில் உள்ளது), பகுத்தறிவைச் செலவு செய்யக் கூடாதா? யோசித்து பாவம் என்ற கட்டுப்பாட்டால்தான் நாம் கீழ் நிலையுற்றோம், சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம், பகுத்தறிவை வளர்க்க படிப்பகங்கள் தேவை, மாணவர்களும் பகுத்தறிவும் (பகுத்தறிவும், புரட்சியும்), பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துக்கள் கொண்டதே இராமாயணம், புரட்சிக்கரமான கலைகள் மிளிர வேண்டும், மூட்டாள்தனம் நம்மோடு போகட்டும் நம் சந்ததியாவது பகுத்தறிவுடன் வாழட்டும் போன்ற 54 தலைப்புகளையும் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு பற்றி பேசிய எழுதிய கருத்துகளைக் கொண்ட நூலாகும்.
-
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / EV Ramasami
₹350.00 -
-
பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [2]
₹180.00 Add to cartபெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [2]
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 2
தந்தை பெரியார்
இந்நூல் பகுத்தறிவே நல்வழி காட்டி, நாமும் அடிகளாரும் சமுதாய நோய் தீர்க்கும் மருத்துவரே, அறிவு வழி ஆராய்ந்து நடப்பவனே நாத்திகன் – மனிதன், நான் பகுத்தறிவுவாதி. மக்களையும் சிந்திக்கச் செய்கிறேன், புத்தருக்குப் பின் எங்களைத் தவிர எவரும் அறிவு பிரச்சாரம் செய்ய தோன்றவில்லை, நம்பிக்கை வாதிகளை மறுத்து அறிவு வாதிகளாக வேண்டும், மற்றங்கள் வாழ்வில் அவசியமே, ஏழைகள் துயரம் நீங்க வழி, நாகரிகம் என்ற என்ன? புதிய கருத்துக்களை ஏற்க மறுத்து பகுத்தறிவை இழக்காதீர்!, எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும், மனிதனே சிந்தித்துப்பார்!, பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே, நான் செய்வது பகுத்தறிவுத் தொண்டே, இனிவரும் உலகத்தில் சமுதாயம் முன்னேற பகுத்தறிவு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், பகுத்தறிவுச் சுடர், பகுத்தறிவுக் கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா போன்ற 43 தலைப்புகளும் தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பகுத்தறிவு பற்றி பேசிய, எழுதிய கருத்துகள் அடங்கிய நூலாகும்.
-
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / Ramasami
₹180.00 -
-
பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [3]
₹210.00 Add to cartபெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [3]
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு-3
தந்தை பெரியார்
இந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா, கடவுள் வயது மூன்றாயிரமே, அய்ந்தறிவும் ஆறறிவும், சிந்திக்காதவன் மிருகமே, ஊர்தோறும் பகுத்தறிவாளர் கழகங்கள் தேவை, பகுத்தறிவு, பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை, பொங்கல் விழாவும் திராவிடர்களும், மூடநம்பிக்கைக்காரரை ஆசிரியராக்கினால், மின்சாரமும் மதமும், செருப்படி எதற்காக? உண்மை நாடுவோர் சங்கம், இறந்தவர்களுக்கச் செய்யப்படும் எதுவும் இறந்தவர்களுக்குச் சேராது, நாலுகடை விசாரிப்பது ஏன்? கடவுள்- மதத்தை குப்பைத் தொட்டியில் போடுங்கள், நீண்ட ஆயுளின் இரகசியம், மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும், காட்டுமிரண்ட்டி மத்தியில் கடிதைத் தொண்டு, முட்டாள்தனம் ஒழிந்தால் முன்னேற்றம், கோயிலுக்குச் செல்வோருக்கு கேள்வி, உலகின் ஒரே பகுத்தறிவு ஆட்சி இது!, பகுத்தறிவு வாதியின் முக்கிய வேலை, தந்தை பெரியார் பகுத்தறிவு விளக்கம், இன இழிவு ஒழிய, கடவுளை ஒதுக்குங்கள், பகுத்தறிவுவாதி யார்? மனிதர்கள் கழகம். போன்ற 92 தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய, எழுதிய கருத்துகள் தொகுப்புகள் கொண்ட நூலாகும்.
-
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / EV Ramasawami
₹210.00 -
-
ஒரு தேசத்திற்கான கடிதங்கள்
₹499.00 Add to cartஒரு தேசத்திற்கான கடிதங்கள்
ஒரு தேசத்திற்கான கடிதங்கள்
ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய
முதல் அமைச்சர்களுக்கு…‘மிகச்சிறப்பாக, நேர்த்தியாக ஒருங்கமைக்கப்பட்ட, திறனுடன் பதிப்பிக்கப்பட்ட ஒரு திரட்டு’
– இந்தியா டுடே
‘எவ்வளவு தூரம், ஜவஹர்லால் நேருவின் தொலை நோக்குப் பார்வைக்கும், மதிநுட்பத்திற்கும், சுயக்கட்டுப்பாட்டிற்கும், பெருந்தன்மையான உணர்வுக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம் என்பதற்கான உரிய நேர நினைவூட்டல்’
– அவுட் லுக்–‘அவருடைய மிகவும் எளிதாகப் புரியக்கூடிய இந்த தொகுப்பில், கோஸ்லா, நமக்கு சிற்பி நேருவை, மறுஅறிமுகம் செய்கிறார்’
– மின்ட்1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக் கடிதங்களின் முதல் கடிதத்தை எழுதினார்…
அவருடைய மறைவுக்கு ஒரு சில மாதங்ககளுக்கு முன்வரை அவர் பாதுகாத்த ஒரு மரபு இது.கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் திரட்டு, குடியுரிமை, போரும் அமைதியும், சட்டம் ஒழுங்கு, தேசியத் திட்டமிடலும் வளர்ச்சியும், ஆட்சிமுறையும் ஊழலும் மற்றும் உலகில் இந்தியாவின் இடம் ஆகியவற்றையும் சேர்த்து, ஒரு வரையறைக்குட்பட்ட கருப்பொருள்களையும், பேசுபடு பொருள்களையும் உள்ளடக்குகிறது. இந்தக் கடிதங்கள், மிக முக்கியமான உலக நிகழ்வுகளையும், விடுதலைக்குப் பிறகு பதினாறு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட பல நெருக்கடிகளையும், மோதல்களையும் கூட உள்ளடக்குகின்றன.தொலைநோக்குடைய, பாண்டித்யம் மிக்க, சிந்தனை வயப்பட்ட இந்தக் கடிதங்கள், நமது தற்கால பிரச்சினைகளுக்கும், இக்கட்டான நிலைமைகளுக்கும் அவை அளிக்கும் வழிகாட்டுதலுக்கான, மிகப்பெரும் சமகாலத்திய பொருத்தப்பாடும் கொண்டவை.
தொகுப்பு : மாதவ் கோஸ்லாதமிழில் : நா. வீரபாண்டியன்
வகை : வரலாறு
பக்கங்கள் 432 ரூ499
₹499.00 -
ஆன்மிக அரசியல் – திரேந்திர கே. ஜா
₹375.00 Add to cartஆன்மிக அரசியல் – திரேந்திர கே. ஜா
ஆன்மிக அரசியல்
திரேந்திர கே. ஜா
“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது”
– அனில் ஸ்வரூப், அலகாபாத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
“ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் ஊடகக் கேமராக்களில் தோன்றும் பல்லாயிரக்கணக்கான ஆன்மிகத் துறவிகளைப் பற்றிய கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல்”
– பிசினஸ் ஸ்டாண்டர்ட்
“புனிதர்களாகக் கருதப்படும் ஆன்மிக சாமியார்களைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகளை மறைத்து வைத்திருந்த பெட்டியைத் திறக்கும் சாவி தான் இந்நூல்”
– தி இந்து பிசினஸ் லைன்
“மத அரசியலையும் உடலெங்கும் சாம்பல் பூசிய நிர்வாண சாமியார்களின் அபூர்வ உலகையும் அறிந்துகொள்ள நினைப்பவர்கள் நிச்சயமாகப் படிக்க வேண்டிய நூல் இது”
– தி ஏசியன் ஏஜ்
தமிழில் : இ.பா.சிந்தன்
பக்கங்கள் 312 ரூ375
₹375.00 -
வாய்ஜாலக் குடியரசு – சுதந்திரப் பேச்சும் இந்திய அரசியலமைப்பும்
₹475.00 Add to cartவாய்ஜாலக் குடியரசு – சுதந்திரப் பேச்சும் இந்திய அரசியலமைப்பும்
வாய்ஜாலக் குடியரசு
சுதந்திரப் பேச்சும் இந்திய அரசியலமைப்பும்அபிநவ சந்திரசூட்
பிரிட்டிஷ் காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் சமூக-அரசியல் மற்றும் சட்ட வரலாற்றை ஆராய்ந்து, “பேச்சுச் சுதந்திரம்” என்ற கருத்திற்கு – ஜனரஞ்சகமாக வெளிப்பாட்டுரிமை எனப் படுவதற்கு – ஒளியூட்டிக் காட்டுகிறது. ஆபாசம், சுதந்திரப் பேச்சு என்பவை தொடர்பான இன்றைய சட்டத்தை ஆராய்கிறது. அரசியலமைப்பைச் சட்டமாக்கிய நிலை, இந்தியாவில் பேச்சுச் சுதந்திரத்தில் முக்கியமான வேறுபாட்டை உருவாக்கியுள்ளதா என்பதை இந்தப் புத்தகம் மதிப்பிடுகிறது. ஆழமான ஆராய்ச்சியுடன், அதிகாரபூர்வமான நிகழ்வுகளை அளிப்பதுடன், இதுவரை உண்மையாக எடுத்துரைக்கப்படாத விவாதங்களை முன்வைக்கிறது,
இந்நூல்.–
தமிழில் : க. பூரணச்சந்திரன்
வகை : கட்டுரை–பக்கங்கள் 416 ரூ475
₹475.00 -
நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்
₹499.00 Add to cartநகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்
நகைக்கத்தக்கதல்ல
அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்
1932- 1956இவ்வரலாறு, வேறெதனையும் போலின்றி, நீங்கள் நகைத்துக் கொண்டிருப்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.1949இல் நத்தையில் சவாரி செய்யும் அம்பேத்கரை சாட்டையால் விளாசும் ஜவஹர்லால் நேருவை சித்தரிக்கும் சங்கரின் கேலிச் சித்திரம், பள்ளிப் பாட நூலில் சேர்க்கப்பட்டிருந்தது தலித் எதிர்ப்பை கிளப்பிற்று. கலையின் சுதந்திரம் என்ற ரீதியில் சவர்ணர்கள் எதிர்வினையாற்றினார்.அப்போது ஆய்வு மாணவரும் கேலிச்சித்திரருமான உண்ணாமதி சியாமா சுந்தர், ஆங்கில மொழி அச்சுப் பதிப்புகளில் வெளியாகியுள்ள, அம்பேத்கர் குறித்த கேலிச் சித்திரங்களை ஆவண காப்பகங்களில் தேடிச் சேகரித்தார். சங்கர்,என்வர் அகமத், ஆர்.கே. லட்சுமண் உள்ளிட்டவர்கள் வரைந்து, இந்தியாவின் முன்னணி பிரசுரங்களில் வெளியாகியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேலிச்சித்திரங்கள், அம்பேத்கர் மீதான வக்கிரமானதும் சிந்தனையற்றதுமான காழ்ப்புணர்வை அப்பட்டமாக்கியிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு கேலிச்சித்திரத்துடன் இணைந்துள்ள கடுமையான விமர்சனக்குறிப்பு,வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டவரின் அசலான வாழ்க்கை வரலாற்றினை முன்வைக்கிறது.–இதற்கு முன் நாம் பார்த்திராத பாபாசாகிபை இந்நூல் நமக்கு வழங்குகிறது – விஜேத குமார்–
தெரிவும் தொகுப்பும் : உண்ணாமதி சியாம சுந்தர்
தமிழில் : சா. தேவதாஸ்
வகை : வரலாறு–
பக்கங்கள் 416 ரூ499
₹499.00 -
தீப்பற்றிய பாதங்கள்
₹550.00 Add to cartதீப்பற்றிய பாதங்கள்
தீப்பற்றிய பாதங்கள்
தலித் இயக்கம் – பண்பாட்டு நினைவு – அரசியல் வன்முறை
டி .ஆர். நாகராஜ்
தீப்பற்றிய பாதங்கள் நூலின் இப்புதிய பதிப்பு முழுமையாக திருத்தப்பட்ட பதிப்பு. உலகெங்கிலும் பல நூல்கள் அடுத்த பதிப்பை காணும் போது முதல்பதிப்பில் இருக்கும் குறைகளை களைந்து வெளியிடுவது இயல்பானதே. ஆனால் இந்நூலினை மொழிபெயர்த்துள்ள ராமாநுஜம் அதன் திருத்தங்களை வெறும் வார்த்தைகளையோடு நிறுத்திவிடாமல் மூல ஆசிரியரின் தொனிக்கு நெருங்கிச்செல்ல முயன்றுள்ளார். மொழியாக்கமும் வாசகரும் இணைந்து ஒரு தொனியை உருவாக்கவேண்டும் என்கிறார்.இப்படியாக இணைந்து ஒரு தொனியை உருவாக்குவதன் ஊடாகவே ஒரு மொழியாக்கம் அதனளவில் தனித்து நிற்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது. இங்கு மூலப் பிரதியின் நோக்கம், மொழியாக்கத்தின் நோக்கம், வாசகரின் நோக்கம் எல்லாம் ஒன்றிணைந்து பலவிதமான தொனிகளை உருவாக்குகின்றன.பொருள் குறித்த தேடலுக்குள் சிக்கிக்கொள்ளும் மொழிபெயர்புகளுள் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு தனித்துவமானது. இதன் பொருட்டே அவர் மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு என்று வரையறுக்கிறார். அது பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு என்கிறார்.THEEP PATTIYA PATHANGALதமிழில் : சீனிவாச ராமாநுஜம்ரூ 550₹550.00 -
அடையாள மீட்பு
₹180.00 Add to cartஅடையாள மீட்பு
அடையாள மீட்பு
காலனிய ஓர்மை அகற்றல்ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்கூகி வா தியாங்கோ
தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.தமிழில் : அ. மங்கைரூ : 180₹180.00 -
திரு & திருமதி ஜின்னா
₹750.00 Add to cartதிரு & திருமதி ஜின்னா
திரு & திருமதி ஜின்னா
இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்
ஷீலா ரெட்டி
1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் – வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம். இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை, ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர், இதுவரை வெளிவராத கடிதங்கள், நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள், ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார். தில்லி, பம்பாய், கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும், மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது.தமிழில் : தருமிரூ: 750₹750.00 -
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
₹350.00 Add to cartஅரசியல் சிந்தனையாளர் புத்தர்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
காஞ்ச அய்லய்யா
‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்’– காஞ்ச அய்லய்யாஇன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும்என்பதற்கும் விதிகள் இருந்தன; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்றஅனைத்திற்கும் விதிகள் இருந்தன. …எனினும், ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது. ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார்’– அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை உரையில்.தமிழில் : அக்களூர் இரவிKancha Elayya / Kancha Ilaiahபக்கங்கள் 336 விலை ரூ 350
₹350.00 -
அரசியலின் இலக்கணம்
₹570.00 Add to cartஅரசியலின் இலக்கணம்
அரசியலின் இலக்கணம்
ஹெரால்டு ஜே லாஸ்கி
முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மகிழ்வூட்டும் போக்கிலும் எழுதப்பட்டுள்ளது. நேர் வெளிப்பாட்டிலும், கருத்துரைகளிலும் நிதானத்தன்மையுடன், இது நவீன அரசியலின் இடர்ப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. ஆயிரமாம் ஆண்டுக்கான சுருக்குவழிகளைச் சிந்தனை வறுமையை மூடுகின்ற போர்வைகள் எனவும் அலங்கார வெளிப்பாட்டிற்கான கருவிகள் எனவும் இந்நூல் வெறுத்து ஒதுக்குகிறது; இருப்பினும் தனது சூழலின் கனத்தை ஓர் அவசர உணர்வோடு தருவதில் வெற்றிபெறுகிறது.
தமிழில் : க பூரணச்சந்திரன்
ரூ570
₹570.00 -
13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
₹220.00 Add to cart13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
ராம்சந்த்ரா சிங்
தமிழில் : இரா செந்தில்
தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன. – வரவர ராவ்
இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண்மைத்தன்மையும் உணர்ச்சிகளை உருக்கக்கூடியது. – கே.ஆர்.மீரா
இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று. – ஆனந்த் டெல்டும்டே
Naxal / Naxalismரூ: 220₹220.00 -
பயங்கரவாதி என புனையப்பட்டேன்
₹200.00 Add to cartபயங்கரவாதி என புனையப்பட்டேன்
பயங்கரவாதி என புனையப்பட்டேன்.பயங்கரவாதி என புனையப்பட்டேன்
மொகமது ஆமிர் கான் – நந்திதா ஹக்ஸர்
‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.’
‘நாடாளுமன்றத் தாக்குதல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதேபோல, எல்லா இசுலாமியர்களும் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன். அரசியலில் எனக்கு எப்போதுமே ஆர்வம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தியாவில் இசுலாமிய மக்களின் எதிர்காலம் குறித்த கேள்வி மனதில் எழுகிறது.நாங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படப் போகிறோமா?தமிழில் : அப்பணசாமிMohammad Aamir Khan / Nandita Haksar (Authors)ரூ200₹200.00 -
பயணம்
₹350.00 Add to cartபயணம்
.பயணம்
சமர் யாஸ்பெக்
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க, துணிச்சலான சாட்சியம். ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப்பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார், பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.
தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்
ரூ350
₹350.00 -
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
₹499.00 Add to cartகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
.பனிப்போர் முதல் இன்று வரை
நந்திதா ஹக்ஸர்
கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது.இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது. பனிப்போர் முடிந்து, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர். இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன.தமிழில் : செ நடேசன்ரூ499₹499.00 -
பாஜக எப்படி வெல்கிறது?
₹320.00 Add to cartபாஜக எப்படி வெல்கிறது?
.இந்தியாவின் சிறப்புமிக்க வாக்கு இயந்திரத்தினுள் ஒரு பார்வை
பிரசாந்த் ஜா
மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சி எப்படியுள்ளது? அனைத்திற்கும் மேலாக, அமித்ஷாவின் திறன்வாய்ந்த தேர்தல் கணக்குகள் பீகாரில் ஏன் தோல்வியடைந்தன?
பாஜகவை சேர்ந்தவர்கள், ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள், அனுபவம் மிக்க கருத்துரையாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் உரையாடியும்,
இந்தியாவின் மாபெரும் மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட விரிவான செய்தியறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், பாஜகவின் வல்லமைமிக்க தேர்தல் இயந்திரத்தினை நிபுணத்துவத்தோடும் நுண்ணறிவுத்திறத்தோடும் கூராய்வு செய்துள்ள இந்நூலின் ஆசிரியர் பிரசாந்த் ஜா, இக்கேள்விகளுக்கான விடைகளைக் கூறியதோடல்லாமல் அதற்கு மேலும் கூட விவரித்துள்ளார்.
தேர்தல் போர்களின் போது களமுனையில் இருந்து பணியாற்றியவர்களிடமிருந்தும், யுத்தியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட அரிய ட்பமான செய்திகள் வெகு சாதுர்யமாக ஆராயப்பட்டிருக்கும் “பாஜக ஜெயிக்கும் கதை” எனும் இந்நூல், இந்தியாவின் ஆளுங்கட்சி குறித்த சிறந்த புத்தகங்களுள் ஒன்றாகும்.
தமிழில் : சசிகலா பாபு
Prasanth Ja
ரூ320₹320.00 -
கடவுள் என்னும் மாயை
₹399.00 Add to cartகடவுள் என்னும் மாயை
.தருமிமகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறித்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டுபட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்றுகுவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும், சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால், கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது.ரூ399₹399.00 -
நிழல் ராணுவங்கள்
₹230.00 Add to cartநிழல் ராணுவங்கள்
.திரேந்திர கே ஜா
“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்” –தி இந்து
“நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்” – வையர்
தமிழில் : இ. ப. சிந்தன்
ரூ230
₹230.00 -
இந்தியா ஏமாற்றப்படுகிறது
₹320.00 Add to cartஇந்தியா ஏமாற்றப்படுகிறது
.
தொகுப்பு
பிரதீக் சின்ஹா / டாக்ட ர் சுமையா ஷேக் / அர்ஜூன் சித்தார்த்அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன.
“இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.
தமிழில் : இ பா சிந்தன்ரூ320₹320.00 -
நான் ஒரு ட்ரால்
₹130.00 Add to cartநான் ஒரு ட்ரால்
..
ஸ்வாதி சதுர்வேதி
பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே
இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தங்களை யார் கேள்வி கேட்டாலும் அவர்களை அவமதிக்கவும், பாலியல்ரீதியில் துன்புறுத்தவும் செய்கிறார்கள்.
ஆனால், இவர்களெல்லாம் யார்? அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? அவர்கள் எப்படி அமைப்புரீதியாக உருவாக்கப்படுகிறார்கள்?
தமிழில் : இரா செந்தில்
ரூ130
₹130.00 -
பெண் ஏன் அடிமையானாள்?
₹80.00 Add to cartபெண் ஏன் அடிமையானாள்?
..பெரியார்
ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.
Periyar / EVR / Thanthai Periyarரூ80₹80.00