Tamil - Non Fiction
Showing all 15 results
-
இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்!
₹400.00 Add to cartஇதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்!
இதற்குப் பெயர்தான்
பார்ப்பனியம்!ஜெயராணி
நாம் பேசமறுக்கும் ஜாதியத்தின்
ஆணிவேரை அடையாளம்காட்டுதல்
‘‘அடிமை வகுப்பினர் சார்பாக ஒன்றைக் கூற விரும்புகிறேன்.இறையாளுமையும் சுதந்திரமும் பெற்ற இந்தியாவில் – வாழ்க்கைத் தத்துவம் மற்றும் சமூக அமைப்பு என்ற முறையில் – பார்ப்பனியம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இம்மக்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை.”
– டாக்டர் அம்பேத்கர்
வகை : கட்டுரைபக்கங்கள் 320 ரூ400
₹400.00 -
அடையாள மீட்பு
₹180.00 Add to cartஅடையாள மீட்பு
அடையாள மீட்பு
காலனிய ஓர்மை அகற்றல்ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்கூகி வா தியாங்கோ
தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.தமிழில் : அ. மங்கைரூ : 180₹180.00 -
ஜாதியற்றவளின் குரல்
₹450.00 Add to cartஜாதியற்றவளின் குரல்
ஜாதியற்றவளின் குரல்
ஜெயராணி
குடிமை உரிமை / மனித உரிமை அமைப்புகள் எனத் தமிழ்நாட்டில் செயல்படும் எந்த அமைப்புடனும் ஜெயராணி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவற்றின் கருத்துநிலை, நடைமுறைத் தளங்களைவிட விரிவானதும் வீச்எல்லைகள் கொண்டவையுமான பிரச்சனைகள் புலனாய்வு இதழியாளராக, மனித உரிமை ஆர்வலராக, தலித்திய எழுத்தாளராக, பெண்ணிலைவாதியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறார் தனது எழுத்துக்கள் மூலம். அம்பேத்கரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையும் பெரியாரின் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பார்வையும் – ஜெயராணி விடயங்களை பார்க்கும் புரிந்துகொள்ளும் கோணத்தை வடிவமைக்கின்றன.– எஸ். வி. ராஜதுரைரூ : 450₹450.00 -
இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
₹320.00 Add to cartஇந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது
சிவம் சங்கர் சிங்
(பாஜகவின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)தமிழில் : இ.பா. சிந்தன்பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.ஆய்வுகளையும், நேர்காணல்களையும், நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும், வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும் விரிவாக இந்நூல் விவரிக்கிறது.தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு என்ன?நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தரவு பகுப்பாய்வு (data analytics), மதிப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்?தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்ன?மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும் எவையெல்லாம் உதவி செய்கின்றன?இந்திய அரசியலின் எதிர்காலம் தான் என்ன?பக்கங்கள்: 360 ரூ320₹320.00 -
மௌன வசந்தம்
₹240.00 Add to cartமௌன வசந்தம்
மௌன வசந்தம்
ரெய்ச்சல் கார்சன்
உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.
சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.‘சைலண்ட் ஸ்பிரிங்கி’ன் (மௌன வசந்தம்) மிக முக்கியமான பாரம்பரியம், மனித தலையீட்டால் இயற்கை பாதிக்கப்படக்கூடியது என்ற புதிய பொது விழிப்புணர்வு. கார்சன் ஒரு தீவிர முன்மொழிவை முன்வைத்தார்: சில சமயங்களில், தொழில்நுட்ப முன்னேற்றம் மிகவும் இயற்கையான செயல்முறைகளுடன் முரண்படுகிறது. வனப்பகுதி காணாமல் போவதைப் பற்றி சிலர் கவலைப்படுவதால், பாதுகாப்பு என்பது பரந்த பொது நலனை உயர்த்தவில்லை. ஆனால் கார்சன் கோடிட்டுக் காட்டிய அச்சுறுத்தல்கள் – உணவுச் சங்கிலியின் மாசுபாடு, புற்றுநோய், மரபணு சேதம், முழு உயிரினங்களின் இறப்பு – புறக்கணிக்க முடியாத அளவுக்கு பயமாக இருந்தது. முதன்முறையாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான தேவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் சுற்றுச்சூழல் பிறந்தது.தமிழில் : பேரா ச வின்சென்ட்Mauna Vasantham / Mavuna Vasanthamபக்கங்கள் 240 விலை ரூ 240
₹240.00 -
ஒற்றை வைக்கோல் புரட்சி
₹160.00 Add to cartஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
புதிதாய் வருபவர்கள் ‘இயற்கை வேளாண்மை’ என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக்கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள்கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடிச் சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.தமிழில் : பூவுலகின் நணபர்கள்Otrai Vaikol Puratchi / Ottrai Vaikkol Puratchiரூ160
₹160.00 -
செர்னோபிலின் குரல்கள்
₹300.00 Add to cartசெர்னோபிலின் குரல்கள்
செர்னோபிலின் குரல்கள்
ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது. இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!.
இதன் விளைவாக இந்த நகரம் கதிர்வீச்சு கொண்ட அயோடின், சீசியம்,ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தைப் பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணுஉலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும்,உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்.
இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்Chernobilin Kuralkal / Chernobylin Kuralkal
ரூ300
₹300.00 -
தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
₹399.00 Add to cartதீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
பிரணாயி ராய்
ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம். மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை. மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில், நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார், அரசியல்வாதியல்ல.
தமிழில் : ச வின்சென்ட்
Theerppu – Indiya Therthalkalai Purinthu Kollal / Theerpu India therthalai
ரூ399
₹399.00 -
ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
₹400.00 Add to cartஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி பிராங்க்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.தமிழில் : உஷாதரன்Anni Frankin Diary Kurippukal
ரூ400₹400.00 -
அரசியலின் இலக்கணம்
₹570.00 Add to cartஅரசியலின் இலக்கணம்
அரசியலின் இலக்கணம்
ஹெரால்டு ஜே லாஸ்கி
முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மகிழ்வூட்டும் போக்கிலும் எழுதப்பட்டுள்ளது. நேர் வெளிப்பாட்டிலும், கருத்துரைகளிலும் நிதானத்தன்மையுடன், இது நவீன அரசியலின் இடர்ப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. ஆயிரமாம் ஆண்டுக்கான சுருக்குவழிகளைச் சிந்தனை வறுமையை மூடுகின்ற போர்வைகள் எனவும் அலங்கார வெளிப்பாட்டிற்கான கருவிகள் எனவும் இந்நூல் வெறுத்து ஒதுக்குகிறது; இருப்பினும் தனது சூழலின் கனத்தை ஓர் அவசர உணர்வோடு தருவதில் வெற்றிபெறுகிறது.
தமிழில் : க பூரணச்சந்திரன்
ரூ570
₹570.00 -
எண்ணெய் மற மண்ணை நினை
₹180.00 Add to cartஎண்ணெய் மற மண்ணை நினை
எண்ணெய் மற மண்ணை நினை
வந்தனா சிவா
பருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்சமும் பெட்ரோல் மலிவு விலையில் கிடைத்து வந்ததும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருதுகோள் குறித்த இலக்கணத்தை மாற்றி அமைக்க் நெருக்கிறது. பெட்ரோல் பயன்பாடற்ற வாழக்கையை கற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரிமை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்றைய உணவு நெருக்கடியால் மேலும் ஒரு மில்லியன் மக்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
Vanthana Siva
ரூ180
₹180.00 -
நீராதிபத்தியம்
₹250.00 Add to cartநீராதிபத்தியம்
நீராதிபத்தியம்
சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்மாட் விக்டோரியா பார்லோ
இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செளிணிய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்த புத்தகத்தை நமக்கு வழங்கியுஷீமீளார் பார்லோ. இந்த புத்தகத்தின் வாயிலாக பார்லோ கோருவது ஒன்றே ஒன்றுதான்: இந்த புவியின் தண்ணீரைக் காப்பாற்ற சர்வதேச அளவில் அனைவரையும் பொறுப்பேற்கச் செளிணிகின்ற, ஐ.நா. மட்டத்தில் நிறைவேற்றத்தக்க ஒரு சர்வதேச உடன்படிக்கைதான்.தமிழில் : சா சுரேஷ்A cautionary account of climate change and the global water supply. “You will not turn on the tap in the same way after reading this book.” ―Robert Redfordரூ250₹250.00 -
பாஜக எப்படி வெல்கிறது?
₹320.00 Add to cartபாஜக எப்படி வெல்கிறது?
.இந்தியாவின் சிறப்புமிக்க வாக்கு இயந்திரத்தினுள் ஒரு பார்வை
பிரசாந்த் ஜா
மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சி எப்படியுள்ளது? அனைத்திற்கும் மேலாக, அமித்ஷாவின் திறன்வாய்ந்த தேர்தல் கணக்குகள் பீகாரில் ஏன் தோல்வியடைந்தன?
பாஜகவை சேர்ந்தவர்கள், ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள், அனுபவம் மிக்க கருத்துரையாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் உரையாடியும்,
இந்தியாவின் மாபெரும் மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட விரிவான செய்தியறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், பாஜகவின் வல்லமைமிக்க தேர்தல் இயந்திரத்தினை நிபுணத்துவத்தோடும் நுண்ணறிவுத்திறத்தோடும் கூராய்வு செய்துள்ள இந்நூலின் ஆசிரியர் பிரசாந்த் ஜா, இக்கேள்விகளுக்கான விடைகளைக் கூறியதோடல்லாமல் அதற்கு மேலும் கூட விவரித்துள்ளார்.
தேர்தல் போர்களின் போது களமுனையில் இருந்து பணியாற்றியவர்களிடமிருந்தும், யுத்தியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட அரிய ட்பமான செய்திகள் வெகு சாதுர்யமாக ஆராயப்பட்டிருக்கும் “பாஜக ஜெயிக்கும் கதை” எனும் இந்நூல், இந்தியாவின் ஆளுங்கட்சி குறித்த சிறந்த புத்தகங்களுள் ஒன்றாகும்.
தமிழில் : சசிகலா பாபு
Prasanth Ja
ரூ320₹320.00 -
கடவுள் கற்பனையே
₹120.00 Add to cartகடவுள் கற்பனையே
.புரட்சிகர மனித வரலாறு
ஏ எஸ் கேஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ரூ120
₹120.00 -
எதிர்க் கடவுளின் சொந்த தேசம்
₹180.00 Add to cartஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்
.ஏ வி சக்திதரன்
கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத்தப்பட்டு ராம்லீலா கொண்டாடப்படுவது. இங்கே வேறொரு புள்ளியில் இணைகின்றது மகிசாசுர மர்த்தினி கதை. தசரா கர்நாடகத்து வாசிப்பு என்றால் துர்கா பூஜை வங்காளத்து வாசிப்பு.
சக்திதரனின் நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் தேர்ச்சிமிக்கதுமான இந்நூல், கேரளத்தின் சிக்கலான சமூகத்தை வடிவமைக்கும் நம்பிக்கையமைப்புகளை விசாரித்தறிய, தொன்மவியல்- வரலாறு, பொருளியல் – இலக்கியத்தை ஒன்றிணைக்கிறது.
தமிழில் : சா தேவதாஸ்
Kerala brahmin / Kerala Parppan
ரூ180
₹180.00