Description
Constitution of India in Tamil
India Arasamaippu இந்திய அரசியலமைப்பு (Tamil – English Edition)
இந்திய அரசமைப்பு
முகப்புரை
இததிய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை
இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும்
மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்,
அதன் குடிமக்கள் அனைவரும்
சமுதாய, பொருளியல், அரசியல் நீதி,
எண்ணம், அதன் வெளியீடு. கோட்பாடு.
சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,
சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை
ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,
அவரகள் அனைவரிடையேயும்
தனிமனிதனின் மாண்பு, நாட்டூமக்களின் ஒற்றுமை.
ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும்
உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும்
உள்ளார்த உறுதியுடையராய்,
நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949
நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று. ஈங்கிதனால்,
இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே
வழங்கிக்கொள்கிறோம்.
Reviews
There are no reviews yet.