Tamil - Literature
Showing all 2 results
-
ஸரமாகோ: நாவல்களின் பயணம்
₹550.00 Add to cart Buy nowஸரமாகோ: நாவல்களின் பயணம்
ஸரமாகோ: நாவல்களின் பயணம்
எஸ் வி ராஜதுரை
மாபெரும் ஆளுமைகளான அன்டோனியோ கிராம்ஷியையும் ழான் பால் சார்த்தரையும் அவர்களுக்கேயுரிய உயிர்த்துடிப்புடன் தமிழ் வாசகர்களுடன் உறவாடச் செய்த தோழர் எஸ்.வி. ராஜதுரை, நோபல் பரிசு பெற்ற போர்த்துகேய எழுத்தாளர் ஜோஸெ ஸரமாகோவை அப்படியே அழைத்துவந்து நம்முன் நிறுத்துகிறார்.2010 வரை நம்முடன் வாழ்ந்து, தனது 88-வயதில் மறைந்த ஸரமாகோ, நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள் என எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். ஸரமாகோவின் சிறப்புக்கு முதன்மைக் காரணமான அவருடைய நாவல்களில் பதினேழையும் குறுநாவல் ஒன்றையும் பற்றிய எஸ்.வி. ராஜதுரையின் ஆழமான அறிமுக – விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன இந்நூலில்.ஸரமாகோவின் இலக்கியப் படைப்புகளிலுள்ள தனித்துவமான எடுத்துரைப்பு முறை, முரண்நகை நிறைந்த குரல், கட்டுத்தளையற்ற கற்பனையாற்றல், நாவல்களின் உருவகத் தன்மை ஆகிய அனைத்தையும் உள்ளவாறே உள்வாங்கி நமக்கு அற்புதமாக மடைமாற்றி விடுகிறார் எஸ்.வி. ராஜதுரை.நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஸரமாகோவின் நாவல்களையே படிக்கும் பேரனுபவத்தைத் தருபவை. ஸரமாகோ நூற்றாண்டு நேரத்தில் தமிழுக்குப் புதிய கொடை.
வகை : இலக்கியம்பக்கங்கள் 496 ரூ550
₹550.00 -
வேர்கள்
₹1,500.00 Add to cart Buy nowவேர்கள்
வேர்கள்
அலெக்ஸ் ஹேலி
‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு.
1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்
Verkal / Vergal
பக்கங்கள் 910 ரூ1500
₹1,500.00