Tamil - Self Help / Motivational

Showing all 5 results

Show Grid/List of >5/50/All>>
 • A Websie For Zero Rupees - Tamil

  பூஜ்ஜிய ரூபாயில் ஒரு இணையதளம்

  299.00
  Add to cart Buy now

  பூஜ்ஜிய ரூபாயில் ஒரு இணையதளம்

  பூஜ்ஜிய ரூபாயில் ஒரு இணையதளம்
  ஹமீத் கான்

  இணையதளத்தை இலவசமாக உருவாக்கலாம்

  இன்று, வணிகங்கள், நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஒரு வலைத்தளத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. பலர் ஆன்லைனில் விஷயங்களைத் தேடுகிறார்கள், எனவே ஒரு வலைத்தளத்தை வைத்திருப்பது நல்லது. உங்களைப் பற்றியும் உங்கள் வணிகத்தைப் பற்றியும், வாடிக்கையாளர் மதிப்புரைகள், தொடர்புத் தகவல்களைப் பற்றியும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய வரைபடங்களையும் சேர்க்கலாம். ஆனால் ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது விலை உயர்ந்தது மற்றும் கடினம். உங்களுக்கு மென்பொருள் அறிவு தேவை மற்றும் நிபுணர்களை பணியமர்த்த வேண்டியிருக்கும், இதற்கு நிறைய பணம் செலவாகும். ஒவ்வொரு ஆண்டும் டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் கட்டணங்களுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்க முடியும். அதை எப்படி செய்வது என்பதை இந்த புத்தகம் உங்களுக்குக் காட்டுகிறது. தேடுபொறி முடிவுகளில் உங்கள் வலைத்தளம் எவ்வாறு தோன்றும் என்பதையும் இது விளக்குகிறது.

  வாருங்கள், பணம் செலவழிக்காமல் ஒரு வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வோம்.

  பக்கங்கள் 178  ரூ299

  299.00
 • கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

  கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

  250.00
  Add to cart Buy now

  கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

  கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

  செல்வக்குவிப்பு உத்திகளில் வல்லவராதல்

  ஹார்வ் எக்கர்

  பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார்.

  ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சிலவை: –

  செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள்.

  பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள்.

  உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள்.

  அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள்.

  நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற ‘உழைப்பில்லாத வருவாயை’ உருவாக்குவதற்கான வழிகள்?

   

  “நன் ஹார்வ் எக்கரின் ன் தாக்கங்களைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வியந்துள்ளேன். நன் இப்புத்தகத்தை வெகுவாகப் புரிந்துரைக்கிறேன்”
   –  ஜாக் கேன்பீல்டு , ஊக்குவிப்பு பேச்சாளர், நூலாசிரியர்

  எழுத்தாளர் பற்றி

  பிறருக்குத் தான் கற்றுக் கொடுக்கின்ற கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் பயன்படுத்தி, ஹார்வ் எக்கர் இரண்டரை ஆண்டுகளில் ஒரு கோடீஸ்வரராக ஆனார். அதற்குப் பின் அவர் வட அமெரிக்காவிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். அவருடைய பயிலரங்குகளில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர். இதுவரை அவர் கற்றுக் கொடுத்த விஷயங்களால் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மக்கள் பயனடைந்துள்ளனர். முதன் முறையாக அதே கொள்கைகளை அவர் இந்நூலின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதைப் படித்து நீங்களும் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்!

  பக்கங்கள் 226 விலை ரூ 250

  250.00
 • இக்கிகய்

  இக்கிகய்

  350.00
  Add to cart Buy now

  இக்கிகய்

  இக்கிகய்

  ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
  இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!

  எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
  உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்குவழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்வ
  து எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
  இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும்  ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.

   

  எழுத்தாளர்கள் பற்றி

  ஹெக்டர்கார்சியா

  ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பலநூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில்‘யகீக்இன்ஜப்பான்’, ‘இக்கிகய்’ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள்புரிந்துள்ளன. ஜப்பானுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள ‘செர்ன்’ நிறுவனத்தில் ஒருகணினிப் பொறியாளராக அவர் பணியாற்றினார்.

  பிரான்செஸ்க் மிராஷெஸ்

  பிரான்செஸ்க் மிராஷெஸ், பலவிருதுகளைப் பெற்றுள்ள, சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ளார். எப்படிச் சிறப்பாக வாழ்வது என்பது குறித்தநூல்களும் அவற்றில் அடக்கம். அதோடு, ‘லவ் இன் ஸ்மால்லெட்டர்ஸ்’, ‘வாபி & சாபி’ ஆகிய இரண்டு நெடுங்கதைகளும் அவற்றில் அடங்கும்.

   

  Ikkigai / Ikkigayi / Ekkigai / Ekigai

  பக்கங்கள்: 212   ரூ350

  350.00
 • பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

  பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

  399.00
  Add to cart Buy now

  பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

  பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
  ராபர்ட் கியோஸாகி

  விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள புத்தகம்

  ராபர்ட் கியோஸாகியின் ‘பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை’ எல்லா காலத்திலும் தனிப்பட்ட # 1 நிதி புத்தகமாக மாறியுள்ளது … டஜன் கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகிறது.

   

  ‘பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை’ என்பது ராபர்ட்டின் இரண்டு அப்பாக்களுடன் – அவரது உண்மையான தந்தை மற்றும் அவரது சிறந்த நண்பரின் தந்தை, அவரது பணக்கார அப்பா – இருவருமே பணம் மற்றும் முதலீடு பற்றிய அவரது எண்ணங்களை வடிவமைத்த வழிகள். புத்தகம் நீங்கள் பணக்காரர்களாக இருக்க அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டுக்கதையை வெடிக்கச் செய்கிறது மற்றும் பணத்திற்காக வேலை செய்வதற்கும் உங்களுடைய பணம் உங்களுக்காக வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது.

   

  • பணக்காரர் ஆக அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கட்டுக்கதையை வெடிக்கச் செய்கிறது.
  • உங்கள் வீடு ஒரு சொத்து என்ற நம்பிக்கையை சவால் செய்கிறது.
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க பள்ளி முறையை ஏன் நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது.
  • ஒரு சொத்து மற்றும் பொறுப்புக்கு ஒரு முறை மற்றும் அனைத்தையும் வரையறுக்கிறது.
  • உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால நிதி வெற்றிக்காக பணத்தைப் பற்றி என்ன கற்பிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது.

  Panakkara Thanthai Ezhai Thanthai

  பக்கங்கள்: 248   ரூ399

  399.00
 • ஒற்றை வைக்கோல் புரட்சி   

  ஒற்றை வைக்கோல் புரட்சி   

  160.00
  Add to cart Buy now

  ஒற்றை வைக்கோல் புரட்சி   

  ஒற்றை வைக்கோல் புரட்சி   
  மசானபு ஃபுகோகா

   

  புதிதாய் வருபவர்கள் ‘இயற்கை வேளாண்மை’ என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக்கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள்கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடிச் சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம்.
  பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை  ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.

  தமிழில் : பூவுலகின் நணபர்கள்

  Otrai Vaikol Puratchi / Ottrai Vaikkol Puratchi
  ரூ160

  160.00