Description
Homo Deus: A brief history of tomorrow (Tamil)
₹499.00
யுவால் நோவா ஹராரி
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரி
• ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்?
• பரிணாம வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறை எடுத்துக் கொள்ளும்போது மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு மாறும்?
• நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புகளையும் பற்றி நம்மைவிட அதிகமாக கூகுளும் முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலைமை என்னவாகும்?
• கணினிகள் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, ‘பயனற்ற வர்க்கம்’ என்ற ஒரு புதிய, மிகப் பெரிய வர்க்கத்தைத் தோற்றுவிக்கும்போது, அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளுக்கு என்ன நேரும்?
• நம்முடைய சொந்த அழிவு சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்?
நம்மை அதிர வைக்கின்ற இது போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி ஏவி, சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவற்றுக்கு இந்நூலில் விடை காண முயற்சித்துள்ளார் பேராசிரியர் ஹராரி.
21ம் நூற்றாண்டைச் செதுக்கி வடிவமைக்கக்கூடிய இனிய கனவுகளையும் கொடுங்கனவுகளையும் பற்றிய ஒரு வெள்ளோட்டத்தை ஹோமோ டியஸ் எனும் இந்நூல் நமக்குக் கொடுக்கிறது.
எழுத்தாளர் பற்றி:
முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
Homo Tius / Homo Dhius Diyes / Diyes / Dhiyas / Diyas
பக்கங்கள் 504 விலை ரூ 499
Homo Deus: A brief history of tomorrow (Tamil)
டான் பிரவுன்
சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு. – பீப்பிள் மேகஸின்
இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர். – நெல்ஸன் டெமில்
திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. – தி டென்வர் போஸ்ட்
தமிழில் : பெரு முருகன், இரா செந்தில்
பக்கங்கள் 336 விலை ரூ 350
நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக் கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா?அல்லது நம்முடை யகண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றவா?
இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இதுபோன்ற மிகமுக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப்பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.
நம்மை நிலை தடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர் கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
உலகப் புகழ்பெற்ற நூலாசிரியரும் வரலாற்றியலாளருமான யுவால் நோவா ஹராரி,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் ஒரு முனைவர் பட்டம்பெற்றவர். அவர் தற்போது ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக ப்பணியாற்றிவருகிறார்.
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, ஹோமோடியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார் யுவால் நோவா ஹராரி.
21 Am Nootrandukkana 21 Padangal / 21 am Nutrandukkana 21 Padankal
பக்கங்கள் 416 விலை ரூ450
டியானே காஃபே , டீன் ஸ்பியர்ஸ்
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:
• மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.
• வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.
• தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!
‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு’
சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் தமிழில்
எழுத்தாளர் பற்றி:
முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
Sapience / Sapians Sabiens Chapiens / Sabians / Sapience
பக்கங்கள் 512 விலை ரூ 599
V. S. Varadaraju –
மில்லியன் நகல் பெஸ்ட்செல்லர்!! நாம் எங்கிருந்து வந்தோம் என்று சேபியன்ஸ் காட்டுகிறது. எதிர்காலத்தில், நாம் எங்கு செல்கிறோம் என்பதை ஹோமோ டியூஸ் காட்டுகிறது.
Nastik Nation –
வாட்ஸ்அப்பில் வாங்க இந்த இணைப்பை அழுத்தவும்: https://wa.me/918893654889?text=I'm%20interested%20in%20the%20title%20'HomoDeus%20Tamil'%20
Hemalatha Krishnan –
இது நிறைய தூண்டுதல் யோசனைகளைக் கொண்ட ஆழமான ஈர்க்கும் புத்தகம், Thank you, Yuval