வேர்கள்
₹1,500.00
வேர்கள்
அலெக்ஸ் ஹேலி
‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு.
1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்
Verkal / Vergal
பக்கங்கள் 910 ரூ1500
You may also like…
-
மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
₹599.00 Add to cart Buy nowமனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
ருட்கர் பிரெக்மன்
மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன.
‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார்.மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.
ருட்கர் பிரெக்மன், ஐரோப்பாவின் பிரபலமான இளம் வரலாற்றியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். டச்சு மொழியில் எழுதப்பட்ட ‘உட்டோப்பியா ஃபார் ரியலிஸ்ட்ஸ்’ என்ற அவருடைய முந்தைய நூல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகைகள் தொகுத்து வழங்குகின்ற, ‘மிகச் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற நூல்கள்’ பட்டியலில் இடம்பெற்றது. அது 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘த கரெஸ்பான்டென்ட்’ என்ற இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக, மிகப் பிரபலமான ‘ஐரோப்பியப் பத்திரிகை விருது’க்கு இரண்டு முறை அவர் பரிந்துரைக்கப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘ஏழ்மை என்பது பணப் பற்றாக்குறையே அன்றி, நடத்தைப் பற்றாக்குறை அல்ல’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய ‘டெட்’ சொற்பொழிவை இதுவரை 36 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘பிக் இஷ்யூ’ பத்திரிகை வெளியிட்ட, 2020 ஆம் ஆண்டில் ‘உலகில் மாற்றம் ஏற்படுத்திய 100 நபர்கள்’ பட்டியலில் ருட்கர் பத்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்.
பக்கங்கள் 518 ரூ599
₹599.00 -
பாலைவனப் பூ
₹400.00 Add to cart Buy nowபாலைவனப் பூ
பாலைவனப் பூ
வாரிஸ் டைரி , காத்லின் மில்லர்
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….
பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.
தமிழில் : எஸ் அர்ஷியா
Palavana Poo / Palaivanappu
பக்கங்கள் 360 ரூ400₹400.00 -
ஆன்மிக அரசியல் – திரேந்திர கே. ஜா
₹375.00 Add to cart Buy nowஆன்மிக அரசியல் – திரேந்திர கே. ஜா
ஆன்மிக அரசியல்
திரேந்திர கே. ஜா
“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது”
– அனில் ஸ்வரூப், அலகாபாத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
“ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் ஊடகக் கேமராக்களில் தோன்றும் பல்லாயிரக்கணக்கான ஆன்மிகத் துறவிகளைப் பற்றிய கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல்”
– பிசினஸ் ஸ்டாண்டர்ட்
“புனிதர்களாகக் கருதப்படும் ஆன்மிக சாமியார்களைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகளை மறைத்து வைத்திருந்த பெட்டியைத் திறக்கும் சாவி தான் இந்நூல்”
– தி இந்து பிசினஸ் லைன்
“மத அரசியலையும் உடலெங்கும் சாம்பல் பூசிய நிர்வாண சாமியார்களின் அபூர்வ உலகையும் அறிந்துகொள்ள நினைப்பவர்கள் நிச்சயமாகப் படிக்க வேண்டிய நூல் இது”
– தி ஏசியன் ஏஜ்
தமிழில் : இ.பா.சிந்தன்
பக்கங்கள் 312 ரூ375
₹375.00 -
ஒற்றை வைக்கோல் புரட்சி
₹160.00 Add to cart Buy nowஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
புதிதாய் வருபவர்கள் ‘இயற்கை வேளாண்மை’ என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக்கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள்கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடிச் சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.தமிழில் : பூவுலகின் நணபர்கள்Otrai Vaikol Puratchi / Ottrai Vaikkol Puratchiரூ160
₹160.00 -
சேப்பியன்ஸ்
₹599.00 Add to cart Buy nowசேப்பியன்ஸ்
யுவால் நோவா ஹராரி
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:• மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.
• வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.
• தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு’
சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் தமிழில்
எழுத்தாளர் பற்றி:
முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
Sapience / Sapians Sabiens Chapiens / Sabians / Sapience
பக்கங்கள் 512 விலை ரூ 599
₹599.00
Ravikumar K –
Mika arumayana puthakam
angela brinklow (Goodreads Review) –
This book changed my life when I read it aged 19. I will be 50 next year and it’s story and characters have never left me.
KS Subramanian (Goodreads) –
I read all the volumes of this Book from Santa Clara Library, California. Now I wish to buy them in Bold Prints. May be it was a fiction but facts proves it could be real. Conversion to Christianity or Islam has the same pattern.
Can you tell me where can I get the Books as I want to preserve them for children of generation after generation to understand the world of religions.
Ganesan V Durai –
Very surpraisiing book, i am giving it 5 stars
Haresh_prasad Y –
I read this book in 1980 when I was 18 yrs old. It was a great experience which made me understand the other side of things that are not disclosed for its very immoral practices. Thank you Alex Haley.