மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள்
சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’
வழியே பார்த்துத்தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே ‘பாவம்’ என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது
வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது
‘நம்பிக்கைகள்’ பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை,வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞர்களுக்கேஉரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.
✅ 100% TAX FREE ✅ 100% REFUND POLICY ✅ 24x7 CUSTOMER CARE ✅ ASSURED HOUSE DOORSTEP DELIVERY ANYWHERE IN INDIA ✅ PERFECT FOR URBAN AND NON-URBAN BUYERS ALIKE ✅ INSTANT WHATSAPP HELPDESK AND DELIVERY STATUS UPDATE ON ENQUIRY: 91-9446808800 ✅ 8 + YEARS OF CUSTOMER SATISFACTION
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆசியாவின் பல நாடுகளில் அவர்களும் இராமனின் பிறப்பிடம் என்று அடையாளம் கண்டுகொண்ட இடங்கள் பல உள்ளன. இங்கே போற்றப்பட்ட ஒரு கதை உலகம் முழுவதும் பரவியது எப்படி? ஆணுக்கொரு இராமாயணமிருந்தால், பெண்ணிற்கென தனியொரு இராமாயணம் இருக்கிறது. குழந்தைகள் இராமாயணத்தை தங்கள் கண்கள் வழியாக மீண்டும் படைத்திருக்கிறார்கள். ஆளுபவனுக்கு ஒரு இராமாயணமிருந்தால், உழுபவனின் இராமாயணம் சொல்வதே வேறு. நாட்டுப்புற இராமாயணத்தைப் படித்தவர்கள் ஒழுங்கான இராமாயணத்தை படித்தால் அங்கே இருப்பதே வேறு.
இந்தியர்களாகிய நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்?
நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, கடும் சவால்களின் ஊடே முதன்முதலாக இந்தியாவை வந்தடைந்ததிலிருந்து அக்கதை தொடங்கிறது. அதற்குப் பிறகு, கி.மு. 7000க்கும் கி.மு. 3000க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஈரானிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் இங்கு வந்து குடியேறுகின்றனர். பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இங்கு நுழைகின்றனர்.
தொல்லியல், மரபியல், வரலாறு, மொழியியல், கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், டோனி ஜோசஃப் நம்முடைய கடந்தகாலத்தைப் படிப்படியாகத் திரைவிலக்கும்போது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய, மிகவும் சர்ச்சைக்குள்ளான, அசௌகரியமான பல கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார். அவற்றில் சில:
• சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார்?
• ஆரியர்கள் உண்மையிலேயே வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்களா?
• மரபியல்ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா?
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல், நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடனும் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு, நாம் யார் என்பது குறித்த மறுக்க முடியாத முக்கியமான உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது. அந்த உண்மை இதுதான்:
நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தாம்!
நாம் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!
எழுத்தாளர் பற்றி:
‘பிசினஸ் வேர்ல்டு’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான டோனி ஜோசஃப், முன்னணி தினசரிகள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இந்தியாவின் தொல்வரலாறு குறித்து வலுவான தாக்கம் ஏற்படுத்தியுள்ள பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
Awards received by this book:
Best non-fiction books of the decade (2010-2019) – The Hindu
Book of the Year Award (non-fiction), Tata Literature Live, 2019 – The Wire
Shakti Bhatt First Book Prize 2019 – The Indian Express
Atta Galatta Award for best Non-Fiction, 2019 – Deccan Herald
One of the 10 Best New Prehistory Books To Read In 2020, as identified by Book Authority
Tony Joseph / Athi Indiayarkal / Indiyar / Adi Dravidar / Adi Indiyarkal
கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர்.
ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.
பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள் உடனிகழ்காலக் கடந்த காலங்கள்
மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பண்பாட்டு கருத்தமைவு குறித்த வரையறைகள் எப்படி மாறியுள்ளன என்று விளக்கி, கூடுதல் கவனம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் தாப்பர். கடந்த காலத்தின் சிந்தனைகள் மற்றும் தேர்ந்தெடுத்த இனங்களால் பண்பாடுகள் வரையறுக்கப்படுகையில், ஒருசில தவிர்த்து ஒப்பீட்டளவில் அறியப்படாதவனவாகவே உள்ளன. இருப்பினும் கடந்த காலத்துடன் தொடர்பு படுத்துவதிலும் உடனிகழ்கால இருப்பு என்றவகையில் அவற்றின் முக்கியத்துவத்திலும், ஒவ்வொன்றும் ஒரு சூழலையும் அர்த்தத்தையும் பெற்றுள்ளன. பண்பாட்டுடன் தொடர்பற்றதாகப் பெரிதும் கருதப்படும் சூழல்கள், எதிரான வகையில் தெளிவுப்படுத்தக் கூடியனவாக இருக்க முடியும். பண்பாடுகளை அடையாளப்படுத்தும் பொருட்களிலிருந்து, சமூகப் பாகுபாடு, பெண்களின் பாத்திரம், அறிவியல் – அறிவின்பாலான அணுகுமுறைகள் போன்ற பண்பாடுகளை வடிவமைக்கும் கருத்துகள் வரை இவற்றில் சிலவற்றை தாப்பர் தொட்டுச் செல்கிறார். சிந்தனையைத் தூண்டும் இதுபோன்ற புத்தகங்கள் விவாதத்தைக் கிளப்பும்; இந்தியாவின் பண்பாடு குறித்த நடப்பு மூட மரபுகள் சிலவற்றை ஓய்ந்துபோகச் செய்யும்.
Reviews
There are no reviews yet.