பாலைவனப் பூ
₹400.00
பாலைவனப் பூ
வாரிஸ் டைரி , காத்லின் மில்லர்
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….
பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.
தமிழில் : எஸ் அர்ஷியா
Palavana Poo / Palaivanappu
Umadevi P –
இந்த புத்தகம் படிக்க தகவலறிந்ததாகவும், மனதைத் தொடுவதாகவும் இருந்தது, இதைப் பார்க்க யாரையும் பரிந்துரைக்கிறேன், அது நமது கிரகத்தின் மற்றொரு உலகத்திற்கு உங்கள் கண்களைத் திறக்கும்.
Ganesh Durairaj –
“பாலைவனப் பூ” என்பது வாரிஸ் டைரியின் (சோமாலிய) வாழ்க்கை பற்றி 1998 இல் வெளியிடப்பட்ட வாரிஸ் டைரி , கேத்லீன் மில்லர் எழுதிய சுயசரிதை புத்தகம். . உண்மையிலேயே ஒரு பரபரப்பான புத்தகம்…
Raveendran Kolappan –
பாலைவனப் பூ: பாலைவன நாடோடி பெண்ணின், வாரிஸ் டைரி , அசாதாரண பயணம்.
Anbarasan K –
அற்புதமான புத்தகம், ஒருமுறை படிக்க ஆரம்பித்தவும், அதை முடிக்கும் வரை என்னால் நிறுத்த முடியவில்லை…
Ravi Arulprasad –
Waris is an inspiration to all. She overcame so much to grasp a chance at true freedom. She is now a determined spokesperson against female genital mutilation. Very good book.