பயணம்
₹350.00
பயணம்
சமர் யாஸ்பெக்
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க, துணிச்சலான சாட்சியம். ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப்பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார், பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.
தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்
ரூ350
Related products
-
சேப்பியன்ஸ்
Rated 5.00 out of 5₹599.00 Add to cartசேப்பியன்ஸ்
யுவால் நோவா ஹராரி
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:• மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.
• வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.
• தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு’
சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் தமிழில்
எழுத்தாளர் பற்றி:
முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
Sapience / Sapians Sabiens Chapiens / Sabians / Sapience
பக்கங்கள் 512 விலை ரூ 599
₹599.00 -
நிழல் ராணுவங்கள்
₹230.00 Add to cartநிழல் ராணுவங்கள்
.திரேந்திர கே ஜா
“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்” –தி இந்து
“நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்” – வையர்
தமிழில் : இ. ப. சிந்தன்
ரூ230
₹230.00 -
உண்மை ராமாயணத்தின் தேடல்
₹230.00 Add to cartஉண்மை ராமாயணத்தின் தேடல்
.ஜி என் நாகராஜ்
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆசியாவின் பல நாடுகளில் அவர்களும் இராமனின் பிறப்பிடம் என்று அடையாளம் கண்டுகொண்ட இடங்கள் பல உள்ளன. இங்கே போற்றப்பட்ட ஒரு கதை உலகம் முழுவதும் பரவியது எப்படி? ஆணுக்கொரு இராமாயணமிருந்தால், பெண்ணிற்கென தனியொரு இராமாயணம் இருக்கிறது. குழந்தைகள் இராமாயணத்தை தங்கள் கண்கள் வழியாக மீண்டும் படைத்திருக்கிறார்கள். ஆளுபவனுக்கு ஒரு இராமாயணமிருந்தால், உழுபவனின் இராமாயணம் சொல்வதே வேறு. நாட்டுப்புற இராமாயணத்தைப் படித்தவர்கள் ஒழுங்கான இராமாயணத்தை படித்தால் அங்கே இருப்பதே வேறு.
தமிழில் : கே நல்லதம்பி
ரூ230
₹230.00 -
ஹோமோ டியஸ்
Rated 5.00 out of 5₹499.00 Add to cartஹோமோ டியஸ்
யுவால் நோவா ஹராரி
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரி• ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்?
• பரிணாம வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறை எடுத்துக் கொள்ளும்போது மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு மாறும்?
• நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புகளையும் பற்றி நம்மைவிட அதிகமாக கூகுளும் முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலைமை என்னவாகும்?
• கணினிகள் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, ‘பயனற்ற வர்க்கம்’ என்ற ஒரு புதிய, மிகப் பெரிய வர்க்கத்தைத் தோற்றுவிக்கும்போது, அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளுக்கு என்ன நேரும்?
• நம்முடைய சொந்த அழிவு சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்?
நம்மை அதிர வைக்கின்ற இது போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி ஏவி, சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவற்றுக்கு இந்நூலில் விடை காண முயற்சித்துள்ளார் பேராசிரியர் ஹராரி.
21ம் நூற்றாண்டைச் செதுக்கி வடிவமைக்கக்கூடிய இனிய கனவுகளையும் கொடுங்கனவுகளையும் பற்றிய ஒரு வெள்ளோட்டத்தை ஹோமோ டியஸ் எனும் இந்நூல் நமக்குக் கொடுக்கிறது.
எழுத்தாளர் பற்றி:
முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
Homo Tius / Homo Dhius Diyes / Diyes / Dhiyas / Diyas
பக்கங்கள் 504 விலை ரூ 499
₹499.00
Reviews
There are no reviews yet.