சேப்பியன்ஸ்

(1 customer review)

499.00

யுவால் நோவா ஹராரி

 

இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:

• மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.

• வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.

• தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.

வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!

 

‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு’

சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் தமிழில்

 

எழுத்தாளர் பற்றி:

முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.

Sapience / Sapians Sabiens Chapiens / Sabians / Sapience

பக்கங்கள் 512   விலை ரூ 499

Category:
✅ SHARE THIS ➷

Description

Sapiens: A Brief History of Humankind (Tamil)

1 review for சேப்பியன்ஸ்

 1. Nastik Nation

  “நம் இனத்தின் சரித்திரத்திலும் எதிர்காலத்திலும் ஈடுபாடு உள்ள எல்லோருக்கும் நான் இந்த நூலை பரிந்துரைக்கிறேன்” – பில் கேட்ஸ்

  * சேபியன்ஸ் – மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு *

  லட்சக்கணக்கானன் வருடங்களுங்களில் குறைத்த பட்சம் ஆறு மனித இனங்கள் பூமியில் இருந்தனர்; இன்றோ ஒரே ஒரு இனம் மட்டும் – நாம், ஹோமோ சேபியன்ஸ்.
  மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் நமது இனம் மட்டும் வென்றது எப்படி ?

  உணவு தேடி அலைந்து திரிந்த நம் முன்னோர்கள் நகரங்களையும் நாடுகளையும் உருவாக்குவதற்காக ஒன்று சேர்ந்தது ஏன் ?

  தெய்வங்களிலும் நாடுகளிலும் மனித உரிமைகளிலும் நமக்கு நம்பிக்கை வரக் காரணம் என்ன ?

  வரவிருக்கும் ஆயிரக்கணக்கான வருடங்களில் நம் உலகம் என்ன நிலையில் இருக்கும்?

  அகண்டதும் நீண்டதுமானதுமான நமது சிந்தனையை தூண்டும் நூல். – சேபியன்ஸ்

  மானுடராக இருப்பதைப்பற்றி நாம் தெரிந்திருந்த அறிவுகள், நம் சிந்தனைகள், செயல்கள், சக்திகள் நோக்கி எதிர்காலம் சவால் விடுகிறது.

  “சேபியன்ஸ் சர்வதேச அளவில் அதிகம் விற்கப்படும் புத்தகங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளதற்கான எளிய காரணம், இது சரித்திரத்தின் மற்றும் புதிய உலகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கையாளுகிறது. மறக்கமுடியாத நயத்துடன் அது எழுதப்பட்டிருக்கிறது.” – ஜெரால்ட் டயமொன்ட்

  சர்வதேச அளவில் மிகச் சிறந்த வெற்றியை பெற்றிருக்கும் சேபியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு. முப்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
  மானுடவியவில் நடைபெறும் அடிப்படையான ஆராய்ச்சிகளுக்கான அளிக்கப்படும் பாலன்ஸ்கி விருது 2012-ல் இந்நூலாசிரியரான யுவால் நோவ ஹராரிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  வாட்ஸ்அப்பில் வாங்க இந்த இணைப்பை அழுத்தவும் / ( பக்கங்கள் 544 விலை ரூ499 ) :https://wa.me/918893654889?text=I'm%20interested%20in%20the%20title%20'Sapiens%20Tamil'%20

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

 • ஹோமோ டியஸ்

  499.00
  Add to cart