மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.
14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறித்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டுபட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்றுகுவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.
மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும், சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால், கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது.
✅ ASSURED HOUSE DOORSTEP DELIVERY ANYWHERE INDIA ✅ 24x7 CUSTOMER CARE ✅ 100% REFUND POLICY ✅ PERFECT FOR URBAN AND NON-URBAN BUYERS ALIKE ✅ INSTANT WHATSAPP HELPDESK AND DELIVERY STATUS UPDATE ON ENQUIRY: 91-9446808800 ✅ 7 PLUS YEARS OF CUSTOMER SATISFACTION
அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன.
“இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரி
• ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்?
• பரிணாம வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறை எடுத்துக் கொள்ளும்போது மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு மாறும்?
• நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புகளையும் பற்றி நம்மைவிட அதிகமாக கூகுளும் முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலைமை என்னவாகும்?
• கணினிகள் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, ‘பயனற்ற வர்க்கம்’ என்ற ஒரு புதிய, மிகப் பெரிய வர்க்கத்தைத் தோற்றுவிக்கும்போது, அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளுக்கு என்ன நேரும்?
• நம்முடைய சொந்த அழிவு சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்?
நம்மை அதிர வைக்கின்ற இது போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி ஏவி, சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவற்றுக்கு இந்நூலில் விடை காண முயற்சித்துள்ளார் பேராசிரியர் ஹராரி.
21ம் நூற்றாண்டைச் செதுக்கி வடிவமைக்கக்கூடிய இனிய கனவுகளையும் கொடுங்கனவுகளையும் பற்றிய ஒரு வெள்ளோட்டத்தை ஹோமோ டியஸ் எனும் இந்நூல் நமக்குக் கொடுக்கிறது.
எழுத்தாளர் பற்றி:
முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
Homo Tius / Homo Dhius Diyes / Diyes / Dhiyas / Diyas
‘ஆர்எஸ்எஸ் – ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம்நீங்கிய, கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்’ – சசி தரூர்
‘இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல’ – பெருமாள் முருகன்
‘இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் ‘இந்துவாக நான் இருக்கமுடியாது’ நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும்’ – பென்யாமின்
‘நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்’ – பாலுலால் கண்டேலா
‘ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும்’ – டாக்டர் தாராராம் கௌதம்
‘சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்’ – அவினாஷ் விகாஸ் சர்மா
HINDUVAKA NAN IRUKKA MUDIYATHU தமிழில் : செ நடேசன்
பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே
இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தங்களை யார் கேள்வி கேட்டாலும் அவர்களை அவமதிக்கவும், பாலியல்ரீதியில் துன்புறுத்தவும் செய்கிறார்கள்.
ஆனால், இவர்களெல்லாம் யார்? அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? அவர்கள் எப்படி அமைப்புரீதியாக உருவாக்கப்படுகிறார்கள்?
Reviews
There are no reviews yet.