எண்ணெய் மற மண்ணை நினை
₹180.00
எண்ணெய் மற மண்ணை நினை
வந்தனா சிவா
பருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்சமும் பெட்ரோல் மலிவு விலையில் கிடைத்து வந்ததும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருதுகோள் குறித்த இலக்கணத்தை மாற்றி அமைக்க் நெருக்கிறது. பெட்ரோல் பயன்பாடற்ற வாழக்கையை கற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரிமை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்றைய உணவு நெருக்கடியால் மேலும் ஒரு மில்லியன் மக்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
Vanthana Siva
ரூ180
Related products
-
இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்
₹150.00 Add to cart Buy nowஇந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்
.
.
சீனிவாச ராமாநுஜம்
காந்தி தன்னை ‘இந்து’ என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் ‘நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார். ‘இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது’ என்கிறார் கோல்வால்கர். ‘இந்து நாகரிகத்தோடும் இந்து பண்பாட்டோடும் தொடர்புகொண்டிருப்பவர்களே இந்துக்கள்’ என்கிறார் சாவர்க்கர். ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்று சசி தரூர் விளக்குகிறார். ‘நான் ஏன் இந்து அல்ல’ என்று காஞ்சா அய்லய்யா விவரிக்கிறார். ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. ‘நான் ஏன் ஓர் இந்து பெண் அல்ல’ என்று வாதிடுகிறார் வந்தனா சோனால்கர். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்து மதத்தை ஒழிக்காமல் சாதிகளை ஒழிக்க முடியாது’ என்கிறார்கள் அம்பேத்கரும் பெரியாரும். அதேசமயத்தில், ‘இந்து என்ற தொகுப்பு காலனியர்களால் உருவாக்கப்பட்டது’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி, பல கோடி மக்கள் தங்களை ‘இந்து’ என்று பதிவுசெய்கிறார்கள். மதச்சார்பின்மைவாதிகள், ‘நாங்கள் இந்து அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்களே தவிர இந்து மதத்துக்கு அல்ல’ என்கிறார்கள். ‘இந்து என்ற கருத்தாக்கம் ஒரு வாழ்க்கைமுறை’ என்கிறது உச்ச நீதிமன்றம். உண்மையில், யார் இந்துவாக வாழ்கிறார்கள்? இந்து என்ற கருத்தாக்கத்தை இந்தப் புத்தகம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது!
Indu matham oru visaranai – Sreenivasa Ramanujam – RSS
ரூ150
Category: Tamil Books / தமிழ் புத்தகங்கள் Tag: Tamil - Study₹150.00 -
இந்துவாக நான் இருக்கமுடியாது
Rated 5.00 out of 5₹299.00 Add to cart Buy nowஇந்துவாக நான் இருக்கமுடியாது
.பன்வர் மெக்வன்ஷி‘ஆர்எஸ்எஸ் – ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம்நீங்கிய, கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்’ – சசி தரூர்
‘இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல’ – பெருமாள் முருகன்
‘இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் ‘இந்துவாக நான் இருக்கமுடியாது’ நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும்’ – பென்யாமின்
‘நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்’ – பாலுலால் கண்டேலா
‘ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும்’ – டாக்டர் தாராராம் கௌதம்
‘சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்’ – அவினாஷ் விகாஸ் சர்மாHINDUVAKA NAN IRUKKA MUDIYATHU
தமிழில் : செ நடேசன்Banvar Mehvanshiபக்கங்கள் 304 ரூ299₹299.00 -
வரலாற்றில் பிராமண நீக்கம் இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்
₹550.00 Add to cart Buy nowவரலாற்றில் பிராமண நீக்கம் இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்
...ப்ரஜ் ரஞ்சன் மணி
வரலாற்றில் பிராமண நீக்கம்… இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்-
அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’. – கெய்ல் ஓம்வெட்
முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு… மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது. – உமா சக்ரவர்த்தி
இந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும். – மெயின்ஸ்ட்ரீம்
தமிழில் : க பூரணச்சந்திரன்ரூ550Category: Tamil Books / தமிழ் புத்தகங்கள் Tag: Tamil - Study₹550.00 -
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
Rated 5.00 out of 5₹299.00 Add to cart Buy nowஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
ஸ்டீபன் ஹாக்கிங்
உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.
உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் தன்னுடைய இந்த இறுதிப் புத்தகத்தில், மனிதகுலம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும், நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றிய தன்னுடைய அக்கறையையும் கரிசனத்தையும் நம் அறிவுக்குத் தீனி போடுகின்ற விதத்திலும் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுணர்வோடும் நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.
எழுத்தாளர் பற்றி:
கலீலியோ பிறந்து துல்லியமாக 300 ஆண்டுகள் கழித்து 1942ம் ஆண்டு ஜனவரி 8ம் நாளன்று இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு நகரில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். 1963ல் அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அப்போதுதான் 21 வயது நிறைவடைந்திருந்தது. அவர் ஒரு சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கும்படி ஆனபோதும்கூட, அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் தன்னுடைய இயற்பியல் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். கோட்பாட்டு இயற்பியலாளரான அவர், உலகம் நெடுகிலும் பயணித்துப் பொதுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஐன்ஸ்டைனுக்குப் பிறகு இவ்வுலகம் கண்ட மிகச் சிறந்த கோட்பாட்டு இயற்பிலாளராகக் கருதப்படுகின்ற ஸ்டீபன் ஹாக்கிங், 2018ம் ஆண்டு மார்ச் 14ம் நாளன்று தன்னுடைய 76வது வயதில் இயற்கை எய்தினார். அவருக்கு மூன்று குழந்தைகளும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
Stephan Hawkings / Stefan Howking / Azhamana Kelvikal Arivanrtha Pathilkal / Arivartha Padilkal / Padhilkal
பக்கங்கள் 234 விலை ரூ 299
₹299.00
Reviews
There are no reviews yet.