Description
Tamil Translation of “I Could Not Be Hindu – The Story of a Dalit in the RSS” by Bhanwar Meghwanshi
₹299.00
‘ஆர்எஸ்எஸ் – ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம்நீங்கிய, கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்’ – சசி தரூர்
‘இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல’ – பெருமாள் முருகன்
‘இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் ‘இந்துவாக நான் இருக்கமுடியாது’ நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும்’ – பென்யாமின்
‘நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்’ – பாலுலால் கண்டேலா
‘ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும்’ – டாக்டர் தாராராம் கௌதம்
HINDUVAKA NAN IRUKKA MUDIYATHU
தமிழில் : செ நடேசன்
Tamil Translation of “I Could Not Be Hindu – The Story of a Dalit in the RSS” by Bhanwar Meghwanshi
ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம். மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை. மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில், நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார், அரசியல்வாதியல்ல.
தமிழில் : ச வின்சென்ட்
Theerppu – Indiya Therthalkalai Purinthu Kollal / Theerpu India therthalai
ரூ399
டியானே காஃபே , டீன் ஸ்பியர்ஸ்
தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.
இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.
உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகத் திகழுகின்ற ‘பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை’யைத் தன் கணவர் பில் கேட்ஸுடன் இணைந்து தோற்றுவித்து, ஒரு கொடையாளியாகவும் தொழிலதிபராகவும் திகழுகின்ற மெலின்டா கேட்ஸ், சர்வதேச அளவில் பெண்களுக்காகவும் சிறுமியருக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கின்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்த மெலின்டா, கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பிறகு எம்பிஏ பட்டமும் பெற்றார். அவர் தன்னுடைய தொழில்வாழ்க்கையின் முதல் பத்தாண்டுகளை மைக்ரோசாஃப்டில் செலவிட்டார். அதன் பிறகு, அவர் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தின்மீதும் அறப்பணிகள்மீதும் முழு கவனம் செலுத்தலானார். வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரில் அவர் தன் கணவர் பில் கேட்ஸுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஜென், ரோரி, ஃபீபி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
Penkalai Uyarthuvom Samuthayathai Uyarthuvom
பக்கங்கள் 342 விலை ரூ399
Senthil Rajasekaran M –
இந்த புத்தகம் பல வழிகளில் தனித்துவமானது. முதலாவதாக, இது முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரால் எழுதப்பட்டது, அவர் அமைப்பின் தீவிர விமர்சகராக ஏன் மாறினார் என்பதை விரிவாக விளக்குகிறார். இன்றுவரை, சில முன்னாள் சுயம்சேவகர்கள் சங்கத்தில் தங்கள் அனுபவம் என்ன என்பதை விவரித்து, அவர்கள் அதை விட்டு சென்றதற்கான காரணங்களை முன்வைத்தனர்.
Tamil Meinathan –
மகாராஷ்டிர பிராமணர்களால் உருவாக்கப்பட்ட, ஆர்எஸ்எஸ் படிப்படியாக “மினியேச்சர் இந்து ராஷ்ட்ரா” ஆக அனைத்து வகையான சாதி பின்னணியிலிருந்தும் இந்துக்களை ஈர்க்க முயன்றது.
Mullai Selvan –
நான் ஆதித்தமிழன்.