Description
Ikigai: The Japanese secret to a long and happy life – Tamil translation
₹350.00
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்குவழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்வ
து எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.
எழுத்தாளர்கள் பற்றி
ஹெக்டர்கார்சியா
ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பலநூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில்‘யகீக்இன்ஜப்பான்’, ‘இக்கிகய்’ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள்புரிந்துள்ளன. ஜப்பானுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள ‘செர்ன்’ நிறுவனத்தில் ஒருகணினிப் பொறியாளராக அவர் பணியாற்றினார்.
பிரான்செஸ்க் மிராஷெஸ்
பக்கங்கள்: 212 ரூ350
Ikigai: The Japanese secret to a long and happy life – Tamil translation
Malini M K –
உலகை வியப்பில் ஆழ்த்திய இன்றைய புத்தகங்களில் ஒன்று. மிகைப்படுத்தாமல் சொன்னால், இது வாழ்க்கையை மாற்றும் புத்தகம். பல்லாயிரக்கணக்கான விற்பனையுடன், 20 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘இகிகாய்’ கோவிட் காலத்திலும் கூட விற்பனையில் உலகம் முழுவதும் அலைகளை உருவாக்கியது. வயதான காலத்தில் கூட இளமையை பாதுகாக்கும் ஜப்பானிய கலை இகிகாய்.
* இகிகாய் *
நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வழவதற்கான ஜப்பானிய இரகசியம்