அரசியல் சிந்தனையாளர் புத்தர்

(3 customer reviews)

350.00

அரசியல் சிந்தனையாளர் புத்தர்
காஞ்ச அய்லய்யா

‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்’
– காஞ்ச அய்லய்யா

இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும்
என்பதற்கும் விதிகள் இருந்தன; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்ற
அனைத்திற்கும் விதிகள் இருந்தன. …எனினும், ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது. ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார்’

– அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை உரையில்.

தமிழில் : அக்களூர் இரவி

Kancha Elayya / Kancha Ilaiah

பக்கங்கள் 336  விலை ரூ 350

✅ 100% TAX FREE ✅ 100% REFUND POLICY ✅ 24x7 CUSTOMER CARE ✅ ASSURED HOUSE DOORSTEP DELIVERY ANYWHERE IN INDIA ✅ PERFECT FOR URBAN AND NON-URBAN BUYERS ALIKE ✅ INSTANT WHATSAPP HELPDESK AND DELIVERY STATUS UPDATE ON ENQUIRY: 91-9446808800 ✅ 8 + YEARS OF CUSTOMER SATISFACTION

Description

Tamil Translation of : God As Political Philosopher : Buddha’s Challenge to Brahminism

அரசியல் சிந்தனையாளர் புத்தர்

3 reviews for அரசியல் சிந்தனையாளர் புத்தர்

  1. Raja Arputhavel

    ஒரு அற்புதமான புத்தகம். நிறைய பொருத்தமான தகவல்களுடன்.

  2. Muthuraj Perumal

    இந்த புத்தகம் மேலும் அறிய உங்களை ஊக்குவிக்கும்.

  3. Kumar Karthikeyan

    ஆழ்ந்த புரிதல் கொண்ட ஒரே தலித் எழுத்தாளர் காஞ்சா

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

  • கடவுள் என்னும் மாயை

    கடவுள் என்னும் மாயை

    399.00
    Add to cart Buy now

    கடவுள் என்னும் மாயை

    .
     
    தருமி
    மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக  மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.
    14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறித்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டுபட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்றுகுவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.
    மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும்,  சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால், கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது.
     
    ரூ399
    399.00
  • இந்தியாவில் சாதிகள்

    இந்தியாவில் சாதிகள்

    150.00
    Add to cart Buy now

    இந்தியாவில் சாதிகள்

    .

    .

    டாக்டர் அம்பேத்கர்

    உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.

     

    B R Ambethkar / Ambedkar

    ரூ150

    150.00
  • இந்துவாக நான் இருக்கமுடியாது

    இந்துவாக நான் இருக்கமுடியாது

    299.00
    Add to cart Buy now

    இந்துவாக நான் இருக்கமுடியாது

     .
    பன்வர் மெக்வன்ஷி
     

    ‘ஆர்எஸ்எஸ் – ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம்நீங்கிய, கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்’ – சசி தரூர்

    ‘இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல’ – பெருமாள் முருகன்

    ‘இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் ‘இந்துவாக நான் இருக்கமுடியாது’ நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும்’ – பென்யாமின்

    ‘நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்’ – பாலுலால் கண்டேலா

    ‘ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும்’ – டாக்டர் தாராராம் கௌதம்

    ‘சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்’ – அவினாஷ் விகாஸ் சர்மா
    HINDUVAKA NAN IRUKKA MUDIYATHU
    தமிழில் : செ நடேசன்
    Banvar Mehvanshi
    பக்கங்கள் 304  ரூ299

    299.00
  • ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்

    450.00
    Add to cart Buy now

    ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்
    ஜெயராணி

    குடிமை உரிமை / மனித உரிமை அமைப்புகள் எனத் தமிழ்நாட்டில் செயல்படும் எந்த அமைப்புடனும் ஜெயராணி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவற்றின் கருத்துநிலை, நடைமுறைத் தளங்களைவிட விரிவானதும் வீச்எல்லைகள் கொண்டவையுமான பிரச்சனைகள் புலனாய்வு இதழியாளராக, மனித உரிமை ஆர்வலராக, தலித்திய எழுத்தாளராக, பெண்ணிலைவாதியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறார் தனது எழுத்துக்கள் மூலம். அம்பேத்கரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையும் பெரியாரின் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பார்வையும் – ஜெயராணி விடயங்களை பார்க்கும் புரிந்துகொள்ளும் கோணத்தை வடிவமைக்கின்றன.
    – எஸ். வி. ராஜதுரை

    ரூ : 450
    450.00
  • பாலைவனப் பூ

    பாலைவனப் பூ

    400.00
    Add to cart Buy now

    பாலைவனப் பூ

    பாலைவனப் பூ
    வாரிஸ் டைரி  , காத்லின் மில்லர்

    நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….

    பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.

    தமிழில் : எஸ் அர்ஷியா

    Palavana Poo / Palaivanappu 

    பக்கங்கள் 360 ரூ400

    400.00
  • நிழல் ராணுவங்கள் 

    நிழல் ராணுவங்கள் 

    230.00
    Add to cart Buy now

    நிழல் ராணுவங்கள் 

    .

    திரேந்திர கே ஜா

     

    “வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்” –தி இந்து

    “நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்” – வையர்

     

    தமிழில் : இ. ப. சிந்தன்

    ரூ230

    230.00
  • இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்

    இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்

    150.00
    Add to cart Buy now

    இந்து மதம் ஒரு விசாரணை : ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்

    .

    .

    சீனிவாச ராமாநுஜம்

     

    காந்தி தன்னை ‘இந்து’ என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் ‘நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார். ‘இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது’ என்கிறார் கோல்வால்கர். ‘இந்து நாகரிகத்தோடும் இந்து பண்பாட்டோடும் தொடர்புகொண்டிருப்பவர்களே இந்துக்கள்’ என்கிறார் சாவர்க்கர். ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்று சசி தரூர் விளக்குகிறார். ‘நான் ஏன் இந்து அல்ல’ என்று காஞ்சா அய்லய்யா விவரிக்கிறார். ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ என்கிறார் பன்வர் மெக்வன்ஷி. ‘நான் ஏன் ஓர் இந்து பெண் அல்ல’ என்று வாதிடுகிறார் வந்தனா சோனால்கர். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்து மதத்தை ஒழிக்காமல் சாதிகளை ஒழிக்க முடியாது’ என்கிறார்கள் அம்பேத்கரும் பெரியாரும். அதேசமயத்தில், ‘இந்து என்ற தொகுப்பு காலனியர்களால் உருவாக்கப்பட்டது’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் மீறி, பல கோடி மக்கள் தங்களை ‘இந்து’ என்று பதிவுசெய்கிறார்கள். மதச்சார்பின்மைவாதிகள், ‘நாங்கள் இந்து அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்களே தவிர இந்து மதத்துக்கு அல்ல’ என்கிறார்கள். ‘இந்து என்ற கருத்தாக்கம் ஒரு வாழ்க்கைமுறை’ என்கிறது உச்ச நீதிமன்றம். உண்மையில், யார் இந்துவாக வாழ்கிறார்கள்? இந்து என்ற கருத்தாக்கத்தை இந்தப் புத்தகம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது!

    Indu matham oru visaranai –  Sreenivasa Ramanujam – RSS 

    ரூ150

    150.00