Tamil Translation

Showing 1–24 of 37 results

Show Grid/List of >5/50/All>>
  • இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    250.00
    Add to cart Buy now

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்
    அலெக்சாண்டர் சோல்செனிட்சின்

    ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது.

    இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்படும் நாயகன், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பிவந்துவிடுகிறான். ரஷ்ய ராணுவமோ அவனை நம்பமறுக்கிறது. உளவாளி என முத்திரை குத்தி சிறையில் அடைத்துவிடுகிறது.

    சிறப்பு முகாமின் ஒரு நாளை விவரிப்பதன் மூலம், அங்கு நடக்கும் ஊழல்கள், சிறைவாழ்வின் பரிதாபங்கள், அடக்குமுறைகள் என அனைத்தையுமே காட்சிப்படுத்திவிடுகிறார் அலெக்ஸாண்டர் ஜோல்செனிட்சின்.

    தமிழில் : க.சுப்பிரமணியன்
    ரூ : 250
    250.00
  • நீதி பற்றிய கோட்பாடு

    நீதி பற்றிய கோட்பாடு

    750.00
    Add to cart Buy now

    நீதி பற்றிய கோட்பாடு

    நீதி பற்றிய கோட்பாடு
    அமார்த்தயா சேன்

     

    மிக மேன்மையானதொரு புத்தகம் .. நீதி பற்றிய கோட்பாட்டைப் படிப்பது, நடைமுறைக் காரண ஆய்வில் ஒரு முதுநிலை வகுப்பில் பங்கேற்பது போன்றுள்ளது. – ஜியாவுதீன் சர்தார், தி இன்டிபென்டன்ட்

    சேன் நம் சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… பொதுஉலகிற்கான அறிவுவாழ்வினரில் ஒருவர், கலப்பற்ற தூய சிந்தனைகளின் உலகங்களையும், மிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளின் உலகங்களையும் எளிதாகத் தாண்டிச் செல்லும் திறனால் வரையறுக்கப்படுகிறார் என்றால், சேனுக்குப்
    போட்டியாளர்கள் மிக அபூர்வம். – தி டைம்ஸ்

    1971 இல் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாடு நூல் வெளிவந்ததற்குப் பின் அமார்த்தியா சேனின் நீதி பற்றிய கோட்பாடு மட்டுமே இந்தத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பு என்று நான் நம்புகிறேன் – ஹிலரி புட்மன், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    ‘தாராளவாத அரசியல் தத்துவத்தின் மேலாதிக்கத்தன்மை பற்றிய சேனின் குற்றநீதி அடிப்படையிலான விமரிசனம், அவர் ஆங்கிலம் பேசும் பொதுவுலகின் புகழ்பெற்ற அறிவுவாழ்வினர் என்பதை உறுதிப்படுத்துகிறது’ – நியூ ஸ்டேட்ஸ்மேன் புக்ஸ் ஆஃப் தி டிகேட்

    தமிழில் : க. பூரணச்சந்திரன்

    ரூ: 750
    750.00
  • மௌன வசந்தம்

    மௌன வசந்தம்

    240.00
    Add to cart Buy now

    மௌன வசந்தம்

    மௌன வசந்தம்
    ரெய்ச்சல் கார்சன்

     

    உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.

    சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.
    சைலண்ட் ஸ்பிரிங்கி’ன் (மௌன வசந்தம்) மிக முக்கியமான பாரம்பரியம், மனித தலையீட்டால் இயற்கை பாதிக்கப்படக்கூடியது என்ற புதிய பொது விழிப்புணர்வு. கார்சன் ஒரு தீவிர முன்மொழிவை முன்வைத்தார்: சில சமயங்களில், தொழில்நுட்ப முன்னேற்றம் மிகவும் இயற்கையான செயல்முறைகளுடன் முரண்படுகிறது. வனப்பகுதி காணாமல் போவதைப் பற்றி சிலர் கவலைப்படுவதால், பாதுகாப்பு என்பது பரந்த பொது நலனை உயர்த்தவில்லை. ஆனால் கார்சன் கோடிட்டுக் காட்டிய அச்சுறுத்தல்கள் – உணவுச் சங்கிலியின் மாசுபாடு, புற்றுநோய், மரபணு சேதம், முழு உயிரினங்களின் இறப்பு – புறக்கணிக்க முடியாத அளவுக்கு பயமாக இருந்தது. முதன்முறையாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான தேவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் சுற்றுச்சூழல் பிறந்தது.

    தமிழில் :  பேரா  ச வின்சென்ட்

    Mauna Vasantham / Mavuna Vasantham 

    பக்கங்கள் 240  விலை ரூ 240

    240.00
  • ஒற்றை வைக்கோல் புரட்சி   

    ஒற்றை வைக்கோல் புரட்சி   

    160.00
    Add to cart Buy now

    ஒற்றை வைக்கோல் புரட்சி   

    ஒற்றை வைக்கோல் புரட்சி   
    மசானபு ஃபுகோகா

     

    புதிதாய் வருபவர்கள் ‘இயற்கை வேளாண்மை’ என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக்கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள்கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடிச் சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம்.
    பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை  ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.

    தமிழில் : பூவுலகின் நணபர்கள்

    Otrai Vaikol Puratchi / Ottrai Vaikkol Puratchi
    ரூ160

    160.00
  • இரவு

    இரவு

    170.00
    Add to cart Buy now

    இரவு

    இரவு
    எலி வீஸல்

     

    1928ம் ஆண்டு ருமேனியாவில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே  ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும்  அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.

    முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’.

    தமிழில் : ரவி தி  இளங்கோவன்

    Iravu / Eravu

    ரூ170

    170.00
  • கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

    கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

    150.00
    Add to cart Buy now

    கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

    கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்
    இவான் இல்லிச்
     

     

    இவான் இல்லிச் மிகுந்த துணிவும், உயிர்த்துடிப்பும் அசாதாரண அறிவும் வளமான கற்பனையும் கொண்டவர். அவருடைய சிந்தனைகளின் முக்கியத்துவம் புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டி மனதில் விடுதலைப் பாதிப்பை உண்டாக்குவதுதான். வாசகரை  பழக்கப்பட்ட, உயிரற்ற, முன்னரே தீர்மானிக்கப்பட்ட எண்ணச் சிறையிலிருந்து வெளியேவரக் கதவைத் திறப்பதால் அவருடைய சிந்தனைகள் அவரை உயிர்த்துடிப்பு உள்ளவராக ஆக்குகின்றன.

    – எரிக் ஃப்ராம்

    தமிழில் : ச  வின்சென்ட்

    Kalvikkudathiliruthu Vidupadum Samudayam / Kalvikkoodathilirunthu Vidupedum Samudhayam

    ரூ150

    150.00
  • தீர்ப்பு - இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    399.00
    Add to cart Buy now

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
    பிரணாயி ராய்

    ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம். மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை. மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில், நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார், அரசியல்வாதியல்ல.

    தமிழில் : ச வின்சென்ட்

    Theerppu – Indiya Therthalkalai Purinthu Kollal / Theerpu India therthalai

     ரூ399

    399.00
  • பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    399.00
    Add to cart Buy now

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்
    மெலின்டா கேட்ஸ்

    தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
    குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.
    இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
    நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.

     

    உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகத் திகழுகின்ற ‘பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை’யைத் தன் கணவர் பில் கேட்ஸுடன் இணைந்து தோற்றுவித்து, ஒரு கொடையாளியாகவும் தொழிலதிபராகவும் திகழுகின்ற மெலின்டா கேட்ஸ், சர்வதேச அளவில் பெண்களுக்காகவும் சிறுமியருக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கின்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்த மெலின்டா, கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பிறகு எம்பிஏ பட்டமும் பெற்றார். அவர் தன்னுடைய தொழில்வாழ்க்கையின் முதல் பத்தாண்டுகளை மைக்ரோசாஃப்டில் செலவிட்டார். அதன் பிறகு, அவர் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தின்மீதும் அறப்பணிகள்மீதும் முழு கவனம் செலுத்தலானார். வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரில் அவர் தன் கணவர் பில் கேட்ஸுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஜென், ரோரி, ஃபீபி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    Penkalai Uyarthuvom Samuthayathai Uyarthuvom 

    பக்கங்கள் 342  விலை ரூ399

    399.00
  • 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

    21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

    450.00
    Add to cart Buy now

    21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

    21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
    யுவால் நோவா ஹராரி

     

    நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக் கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா?அல்லது நம்முடை யகண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றவா?

    இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இதுபோன்ற மிகமுக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப்பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.

    நம்மை நிலை தடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர் கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?

     

    உலகப் புகழ்பெற்ற நூலாசிரியரும் வரலாற்றியலாளருமான யுவால் நோவா ஹராரி,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் ஒரு முனைவர் பட்டம்பெற்றவர். அவர் தற்போது ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக ப்பணியாற்றிவருகிறார்.

    சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, ஹோமோடியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ஆகிய   புத்தகங்களை எழுதியுள்ளார் யுவால் நோவா ஹராரி.

    21 Am Nootrandukkana 21 Padangal / 21 am Nutrandukkana 21 Padankal

    பக்கங்கள் 416  விலை ரூ450

    450.00
  • பாலைவனப் பூ

    பாலைவனப் பூ

    400.00
    Add to cart Buy now

    பாலைவனப் பூ

    பாலைவனப் பூ
    வாரிஸ் டைரி  , காத்லின் மில்லர்

    நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….

    பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.

    தமிழில் : எஸ் அர்ஷியா

    Palavana Poo / Palaivanappu 

    பக்கங்கள் 360 ரூ400

    400.00
  • பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி - கிரெட்டா துன்பர்க்

    பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி – கிரெட்டா துன்பர்க்

    35.00
    Add to cart Buy now

    பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி – கிரெட்டா துன்பர்க்

    பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி – கிரெட்டா துன்பர்க்
    ஆதி வள்ளியப்பன்

    சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக மாறியிருக்கிறது. காலநிலை மாற்ற நெருக்கடி என்ற பிரச்சினையை உலகம் இன்றைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

    “நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பேரச்சம் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நான் நாள்தோறும் உணரும் அச்சத்தை, நீங்களும் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நம் வீடு தீப்பற்றி எரியும்போது என்ன செய்வோம்? அதையே இப்போதும் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.”

    ரூ35

    35.00
  • ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

    ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

    400.00
    Add to cart Buy now

    ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

    ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
    ஆனி பிராங்க்  

     

    இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.

    தமிழில் : உஷாதரன்

    Anni Frankin Diary Kurippukal 

    ரூ400

    400.00
  • வேர்கள் 

    வேர்கள் 

    1,500.00
    Add to cart Buy now

    வேர்கள் 

    வேர்கள் 
    அலெக்ஸ் ஹேலி

    ‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு.

    1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.

    தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்

    Verkal / Vergal 

    பக்கங்கள் 910  ரூ1500


    1,500.00
  • எங்கே செல்கிறது இந்தியா?

    எங்கே செல்கிறது இந்தியா?

    350.00
    Add to cart Buy now

    எங்கே செல்கிறது இந்தியா?

    எங்கே செல்கிறது இந்தியா?
    கைவிடப்பட்ட கழிப்பிடங்கள்/ தடைபட்ட வளர்ச்சிகள்/ சாதியத்தின் விலைகள்

     டியானே காஃபே ,  டீன் ஸ்பியர்ஸ்

    இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன் ஒருபகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக்கிருமிகளை கழிப்பிடங்களும், கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது கழிப்பிடங்களையோ பயன்படுத்துவதில்லை. அதனால், அருகில் உள்ள ஏழை நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகள் மிகவும் அதிகமாக இறந்துவிடுகின்றன. இந்தியாவிலுள்ள குழந்தைகள் சஹாரா –ஆஃப்ரிக்க துணைக்கண்டத்திலுள்ள குழந்தைகளைவிட வளர்ச்சி தடைபட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவின் திறந்தவெளி மலம் கழிப்பு வறுமையினால் அல்ல: சாதிய அமைப்புமுறை, தீண்டாமை, சடங்குபூர்வ புனிதம், தீட்டு ஆகியவற்றின் நேரடி விளைவுகளாலேயே என்பதை ‘எங்கே செல்கிறது இந்தியா?’ மெய்ப்பித்துக் காட்டுகிறது.

     தமிழில் : செ  நடேசன்

    Where India Goes: Abandoned Toilets, Stunted Development and the Costs of Caste
    Enke Selkirathu India Enke Selgirathu Indiya
    ரூ350

    350.00
  • அரசியலின் இலக்கணம் 

    அரசியலின் இலக்கணம் 

    570.00
    Add to cart Buy now

    அரசியலின் இலக்கணம் 

    அரசியலின் இலக்கணம் 
    ஹெரால்டு ஜே லாஸ்கி  

     

    முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மகிழ்வூட்டும் போக்கிலும் எழுதப்பட்டுள்ளது. நேர் வெளிப்பாட்டிலும், கருத்துரைகளிலும் நிதானத்தன்மையுடன், இது நவீன அரசியலின் இடர்ப்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. ஆயிரமாம் ஆண்டுக்கான சுருக்குவழிகளைச் சிந்தனை வறுமையை மூடுகின்ற போர்வைகள் எனவும் அலங்கார வெளிப்பாட்டிற்கான கருவிகள் எனவும் இந்நூல் வெறுத்து ஒதுக்குகிறது; இருப்பினும் தனது சூழலின் கனத்தை ஓர் அவசர உணர்வோடு தருவதில் வெற்றிபெறுகிறது.

     தமிழில் : க  பூரணச்சந்திரன்

    ரூ570

    570.00
  • எண்ணெய் மற மண்ணை நினை

    எண்ணெய் மற மண்ணை நினை

    180.00
    Add to cart Buy now

    எண்ணெய் மற மண்ணை நினை

    எண்ணெய் மற மண்ணை நினை
    வந்தனா சிவா

    பருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்சமும் பெட்ரோல் மலிவு விலையில் கிடைத்து வந்ததும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருதுகோள் குறித்த இலக்கணத்தை மாற்றி அமைக்க் நெருக்கிறது. பெட்ரோல் பயன்பாடற்ற வாழக்கையை கற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரிமை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்றைய உணவு நெருக்கடியால் மேலும் ஒரு மில்லியன் மக்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    Vanthana Siva

    ரூ180

    180.00
  • நீராதிபத்தியம்

    நீராதிபத்தியம்

    250.00
    Add to cart Buy now

    நீராதிபத்தியம்

    நீராதிபத்தியம்
    சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்

    மாட் விக்டோரியா பார்லோ



    இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செளிணிய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்த புத்தகத்தை நமக்கு வழங்கியுஷீமீளார் பார்லோ. இந்த புத்தகத்தின் வாயிலாக பார்லோ கோருவது ஒன்றே ஒன்றுதான்: இந்த புவியின் தண்ணீரைக் காப்பாற்ற சர்வதேச அளவில் அனைவரையும் பொறுப்பேற்கச் செளிணிகின்ற, ஐ.நா. மட்டத்தில் நிறைவேற்றத்தக்க ஒரு சர்வதேச உடன்படிக்கைதான்.

    தமிழில் : சா  சுரேஷ்
    A cautionary account of climate change and the global water supply. “You will not turn on the tap in the same way after reading this book.” ―Robert Redford
    ரூ250

    250.00
  • 13 வருடங்கள் - ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

    13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

    220.00
    Add to cart Buy now

    13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

    13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
    ராம்சந்த்ரா சிங்

     

    தமிழில் : இரா செந்தில்

     

    தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.  வரவர ராவ் 

    இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண்மைத்தன்மையும் உணர்ச்சிகளை உருக்கக்கூடியது. – கே.ஆர்.மீரா

    இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று. – ஆனந்த் டெல்டும்டே   

    Naxal / Naxalism 
    ரூ: 220
    220.00
  • பயங்கரவாதி என புனையப்பட்டேன்

    பயங்கரவாதி என புனையப்பட்டேன்

    200.00
    Add to cart Buy now

    பயங்கரவாதி என புனையப்பட்டேன்

    பயங்கரவாதி என புனையப்பட்டேன்.
    பயங்கரவாதி என புனையப்பட்டேன்
    மொகமது ஆமிர் கான் – நந்திதா ஹக்ஸர்

     

    ‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள்  ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.’

    ‘நாடாளுமன்றத் தாக்குதல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதேபோல, எல்லா இசுலாமியர்களும் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன். அரசியலில் எனக்கு எப்போதுமே ஆர்வம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தியாவில் இசுலாமிய மக்களின் எதிர்காலம் குறித்த கேள்வி மனதில் எழுகிறது.நாங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படப் போகிறோமா?

    தமிழில் : அப்பணசாமி
    Mohammad Aamir Khan / Nandita Haksar (Authors)
    ரூ200
    200.00
  • பயணம்

    பயணம்

    350.00
    Add to cart Buy now

    பயணம்

    .
    பயணம்
    சமர் யாஸ்பெக்

     

     

    பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க, துணிச்சலான சாட்சியம். ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப்பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார், பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.

    தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்

    ரூ350

    350.00
  • கடைசி முகலாயன்

    கடைசி முகலாயன்

    899.00
    Add to cart Buy now

    கடைசி முகலாயன்

    .

    ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி 1857

     


    வில்லியம் டேல்ரிம்பிள்

     

    வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை கடைசி முகலாயன் காட்டியிருக்கிறது. அரசர்களின் வறட்டுப் பட்டியலாக, போர்கள் மற்றும் உடன்படிக்கைகளாக அல்லாமல் கடந்தகாலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவர வேண்டும். நீண்டகாலத்திற்கு முன்னரே இறந்துவிட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும். அவர் நம்மிடையே வாழ்கிறார் என வாசகர்களை உணரவைக்க வேண்டும். அவர்களுடைய மகிழ்ச்சியை, வருத்தங்களை, கவலைகளை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். டேல்ரிம்பிளின் புத்தகம் ஆழமான உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. இது டெல்லிவாசிகள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்.

    குஷ்வந்த் சிங், அவுட்லுக் இந்தியா

     

    தமிழில் : இரா  செந்தில்

    ரூ899

    899.00
  • நான் செய்வதைச் செய்கிறேன்

    நான் செய்வதைச் செய்கிறேன்

    399.00
    Add to cart Buy now

    நான் செய்வதைச் செய்கிறேன்

    .

    ரகுராம் ராஜன்

     

    ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில்  ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும், அவருடைய ஆழமான புலமையையும், துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. – C. ரங்கராஜன , முன்னாள் RBI ஆளுநர்

    Raguram Rajan

    தமிழில் : ச வின்சென்ட்

    ரூ: 399
    399.00
  • அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    180.00
    Add to cart Buy now

    அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    .
     

    ஏ எஸ் கே

     

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்மவெறியர்கள் எங்குப்பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

    டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.

    ரூ180

    180.00
  • ஆடு ஜீவிதம்

    ஆடு ஜீவிதம்

    270.00
    Add to cart Buy now

    ஆடு ஜீவிதம்

    .
    ஆடு ஜீவிதம்
     
    பென்யாமின்

     

    நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி   பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான   குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர்   ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

    மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய   எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின்,  நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

    2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்

    Benyamin

    தமிழில் : விலாசினி

    ரூ270

    270.00