Tamil - History

Showing all 20 results

Show Grid/List of >5/50/All>>
  • Periyr Collectiion on Religion

    பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம் 1-6]

    395.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம் 1-6]

    பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம்1-6]
    தந்தை பெரியார்

     

    இந்நூல்  –  மத விபரீதம், குருக்களின் புரட்டு, இந்து மத பிரசாரம்,  சன்மாக்கமும் துன்மார்க்கமும், இந்து மதங்களும்  யாகங்களும், சமயம், சைவ சமயம், வருணாசிரம மாநாடு, இந்தியாவில் பார்ப்பனீயம், எது ஜீவகாருண்யம், மதமும் சீர்திருத்தமும் மூடப்பண்டிகைகள், சோதிடம், இஸ்லாமியமும் இந்து மதமும், சமரச சன்மார்க்கமும், ஆத்மா  பற்றிய ஓர் ஆராய்ச்சி போன்ற  44 உட்தலைப்புகளில் மதம் பற்றிய பெரியாரின்  பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.

    இந்நூல் – கடவுள்  கதை, கடவுளும் மனிதனும்  கடவுள் மறுப்பும்  கோவில்  இருப்பும், கடவுள் இழிவு, மூடநம்பிக்கை, கடவுள் உண்டான  காலம், கடவுள்  அவதாரங்கள், கடவுள்  பக்தி, இழிவை ஒழிக்க  வழி, வளர்ச்சிக்கு வழி, பூசையால் விளையும்  நாசம், அறிவுக்கு பொருந்தாத கடவுள், கோயில் ஒரு சுரண்டல் கருவி, கபட  நாடகக்  கடவுள், கடவுளின்  திருவிளையாடல்கள், கடவுள் தர்பார், பகவான்  சோதிக்கிறார், கோயில்கள்  ஏற்பட்டது எப்படி?  தத்துவ விளக்கம் போன்ற  79 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள்  பற்றிய  பெரியாரின்  பேச்சுக்களும்  கட்டுரைகளும் கொண்டது.

    இந்நூல் –  இரு கிருஷ்ணர்கள், தருமம் என்பது என்ன?, செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள், கேரளா சீர்திருத்த  மகாநாடு, மதமும் சாதியும்,  கோவில் கோபுரங்களின்  ஆபாசங்கள், புத்தமதமும்  சுயமரியாதையும், இந்து – முஸ்லிம், அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை, மத ஸ்தாபனங்கள், அக்ரகாரத்தில் மகாத்மா, மதக்கிறுக்கு, இஸ்லாம்  மத ஒழுக்கம், இந்து முஸ்லீம்  ஒற்றுமை, பார்ப்பனிய  பிளேக்கை அழிக்க வேண்டும், போன்ற 52  உட்தலைப்புகளில் காலவரிசைப்படி  மதம் பற்றிய பெரியாரின்  கட்டுரைகளும் பேச்சுகளும் அடங்கியது.

    இந்நூல் – ஆரிய மதவண்டவாளம், மேல்நாடும் கீழ்நாடும், எது உண்மை மதம்,  வர்ணாஸ்சிரமச் சாக்கடை, சைவ வைணவப் போட்டி , எது கடவுள்?, எது மதம்?, பார்வதி  பரமசிவன் சாம்பாஷணை, நாயன்மார் முக்தி பெற்ற  விதம்,  ராமனும் சீதையும் யோக்கியர்களா?, பழந்துனி கேட்கும் பரமன்,  சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம், சமுதாயத் துறையில் நமது நிலை, சிவராத்திரி பண்டிகையின்  வண்டவாளம், வேதம் என்பது  வெறும்  வசைப்பாட்டுகளே  போன்ற 58  உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.

     

    395.00
  • Periyar Book - About God

    பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]

    780.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]

    பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]
    பெரியார்

     

    இந்நூல்  – கடவுள், சாமியும் சமயமும், காந்தியும் கடவுளும், பிள்ளையார், பிரார்த்தனை, ஆரியர் கடவுள், எது நாஸ்திகம், பிள்ளையார் உடைப்பு  கடவுள்  யோக்கியதை, கடவுள் குழப்பம், கடவுள் என்பது ஒரு பொருளா? இந்து மதத்திற்கு  கடவுள் உண்டா?  கடவுளின் நாச  வேலைகள்  போன்ற  64 உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி கடவுள் பற்றிய  பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.

    780.00
  • மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

    599.00
    Add to cart Buy now

    மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

    மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
    ருட்கர் பிரெக்மன்

     

    மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன.

    ‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
    சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார்.

    மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.

     

    ருட்கர் பிரெக்மன், ஐரோப்பாவின் பிரபலமான இளம் வரலாற்றியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். டச்சு மொழியில் எழுதப்பட்ட ‘உட்டோப்பியா ஃபார் ரியலிஸ்ட்ஸ்’ என்ற அவருடைய முந்தைய நூல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகைகள் தொகுத்து வழங்குகின்ற, ‘மிகச் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற நூல்கள்’ பட்டியலில் இடம்பெற்றது. அது 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘த கரெஸ்பான்டென்ட்’ என்ற இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக, மிகப் பிரபலமான ‘ஐரோப்பியப் பத்திரிகை விருது’க்கு இரண்டு முறை அவர் பரிந்துரைக்கப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘ஏழ்மை என்பது பணப் பற்றாக்குறையே அன்றி, நடத்தைப் பற்றாக்குறை அல்ல’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய ‘டெட்’ சொற்பொழிவை இதுவரை 36 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘பிக் இஷ்யூ’ பத்திரிகை வெளியிட்ட, 2020 ஆம் ஆண்டில் ‘உலகில் மாற்றம் ஏற்படுத்திய 100 நபர்கள்’ பட்டியலில் ருட்கர் பத்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்.

    பக்கங்கள் 518 ரூ599

    599.00
  • கேலிச்சித்திர வரலாறு

    299.00
    Add to cart Buy now

    கேலிச்சித்திர வரலாறு

    கேலிச்சித்திர வரலாறு

    கன்னடத்தில்: டாக்டர் ஜே. பாலகிருஷ்ணா
    தமிழில்: கே. நல்லதம்பி

    கேலிச்சித்திரக் கலை மொழியின் தயவில்லாமல் உலகம் முழுவதும் பரவிய ஒரு அற்புதமான கலை.
    கேலிச்சித்திரக் கலை மக்கள் விரும்பத்தக்க கலையாக வளர்ந்திருந்தாலும் தமிழில் இந்தக் கலையின் வரலாற்றைப் பற்றி, பெருமையைப் பற்றிய நூல்கள் வெளியானது மிகவும் அரிது. ஜே. பாலகிருஷ்ணன் அவர்களுடைய இந்த கன்னடப் படைப்பும் கே. நல்லதம்பி அவர்களுடைய அதன் தமிழ் மொழியாக்கமும் அந்தக் குறையைப் போக்க உதவியாக இருக்கும். இந்தக் கலையின் வரலாற்றைப் பற்றி ஜே. பாலகிருஷ்ணன் போதுமான அளவு செய்திகளைத் திரட்டி அதற்குப் பொருத்தமான படங்களையும் சேகரிக்க எடுத்துக் கொண்ட சிரமங்கள் பாராட்ட வேண்டியவை. அதிலும் இந்த நூலை தமிழுக்கு அறிமுகப் படுத்தியது சிறப்பான காரியம். ஆய்வு குணங்களைக் கொண்ட கட்டுரைகளின் இந்தத் தொகுப்பு கேலிச்சித்திரக் காலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக உள்ளது. எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம் இது என்பது என் எண்ணம்.
    வி. ஜி. நரேந்திரா
    மூத்த கேலிச்சித்திரக் கலைஞர்

    வகை : வரலாறு
    பக்கங்கள் 264  ரூ299


    299.00
  • ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்

    550.00
    Add to cart Buy now

    ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்

    ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம்
    எஸ் வி ராஜதுரை

     

    1917 நவம்பரில் பத்து நாள்கள் இரத்தம் சிந்தாமல் நடைந்தேறிய ரஷியப் பாட்டாளிவர்க்கப் புரட்சி  தோற்றுவித்த சோவியத் யூனியன் உருவாக்கிய கனவுகள், எதிர்பார்ப்புகள் ,அது சென்ற பாதையில் ஏற்பட்ட சறுக்கல்கள் ஆகியவற்றுக்கான சாட்சியங்களாக  அக்காலத்திய மாபெரும் கலை இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறது இந்த  நூல்.யெஸினின, மயாகோவ்ஸ்கி, பாஸ்டரநாக், அக்மதோவா, மாண்டெல்ஷ்டாம் போன்றோரின் ஆக்கங்களின் தமிழாக்கங்கள் வாசகர்களின் இரசனைக்கு விருந்து என்றால் சோவியத் யூனியன் இரண்டே.நாள்களில்  தகர்ந்து விழுந்ததைப் பற்றிய விளக்கம் சிந்தனையைக் கிளரும்.

    வகை: வரலாறு
    பக்கங்கள் 520  ரூ550

    550.00
  • ஒரு தேசத்திற்கான கடிதங்கள்

    499.00
    Add to cart Buy now

    ஒரு தேசத்திற்கான கடிதங்கள்

    ஒரு தேசத்திற்கான கடிதங்கள்

    ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய
    முதல் அமைச்சர்களுக்கு…

    ‘மிகச்சிறப்பாக, நேர்த்தியாக ஒருங்கமைக்கப்பட்ட, திறனுடன் பதிப்பிக்கப்பட்ட ஒரு திரட்டு’
    இந்தியா டுடே

    ‘எவ்வளவு தூரம், ஜவஹர்லால் நேருவின் தொலை நோக்குப் பார்வைக்கும், மதிநுட்பத்திற்கும், சுயக்கட்டுப்பாட்டிற்கும், பெருந்தன்மையான உணர்வுக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம் என்பதற்கான உரிய நேர நினைவூட்டல்’
    அவுட் லுக்
    ‘அவருடைய மிகவும் எளிதாகப் புரியக்கூடிய இந்த தொகுப்பில், கோஸ்லா, நமக்கு சிற்பி நேருவை, மறுஅறிமுகம் செய்கிறார்’
    மின்ட்
                                                                      
    1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக் கடிதங்களின் முதல் கடிதத்தை எழுதினார்…
    அவருடைய மறைவுக்கு ஒரு சில மாதங்ககளுக்கு முன்வரை அவர் பாதுகாத்த ஒரு மரபு இது.கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் திரட்டு, குடியுரிமை, போரும் அமைதியும், சட்டம் ஒழுங்கு, தேசியத் திட்டமிடலும் வளர்ச்சியும், ஆட்சிமுறையும் ஊழலும் மற்றும் உலகில் இந்தியாவின் இடம் ஆகியவற்றையும் சேர்த்து, ஒரு வரையறைக்குட்பட்ட கருப்பொருள்களையும், பேசுபடு பொருள்களையும் உள்ளடக்குகிறது. இந்தக் கடிதங்கள், மிக முக்கியமான உலக நிகழ்வுகளையும், விடுதலைக்குப் பிறகு பதினாறு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட பல நெருக்கடிகளையும், மோதல்களையும் கூட உள்ளடக்குகின்றன.தொலைநோக்குடைய, பாண்டித்யம் மிக்க, சிந்தனை வயப்பட்ட இந்தக் கடிதங்கள், நமது தற்கால பிரச்சினைகளுக்கும், இக்கட்டான நிலைமைகளுக்கும் அவை அளிக்கும் வழிகாட்டுதலுக்கான, மிகப்பெரும் சமகாலத்திய பொருத்தப்பாடும் கொண்டவை.

    தொகுப்பு : மாதவ் கோஸ்லா
    தமிழில் : நா. வீரபாண்டியன்

    வகை : வரலாறு 
    பக்கங்கள் 432   ரூ499

    499.00
  • ஆன்மிக அரசியல் – திரேந்திர கே. ஜா

    375.00
    Add to cart Buy now

    ஆன்மிக அரசியல் – திரேந்திர கே. ஜா

    ஆன்மிக அரசியல்
    திரேந்திர கே. ஜா

     

    “அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது”

    அனில் ஸ்வரூப், அலகாபாத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

    “ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் ஊடகக் கேமராக்களில் தோன்றும் பல்லாயிரக்கணக்கான ஆன்மிகத் துறவிகளைப் பற்றிய கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல்”

    – பிசினஸ் ஸ்டாண்டர்ட்

    “புனிதர்களாகக் கருதப்படும் ஆன்மிக சாமியார்களைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகளை மறைத்து வைத்திருந்த பெட்டியைத் திறக்கும் சாவி தான் இந்நூல்”

    – தி இந்து பிசினஸ் லைன்

    “மத அரசியலையும் உடலெங்கும் சாம்பல் பூசிய நிர்வாண சாமியார்களின் அபூர்வ உலகையும் அறிந்துகொள்ள நினைப்பவர்கள் நிச்சயமாகப் படிக்க வேண்டிய நூல் இது”

    – தி ஏசியன் ஏஜ்


    தமிழில் :  இ.பா.சிந்தன்

    பக்கங்கள்  312  ரூ375

     

    375.00
  • குருதி நிலம் – மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு

    200.00
    Add to cart Buy now

    குருதி நிலம் – மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு

    குருதி நிலம்
    மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு
    தீப் ஹல்தர்
    1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் வந்த மத்திய இந்திய அகதி முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டபோது நோய்களாலும், அவர்கள் மீதான அரசின் பொருளாதாரத் தடையால் உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டாலும், அரசாங்கத்தால் ஏவப்பட்ட காவல்துறையினரால் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாலும் நிறைய அகதிகள் கொல்லப்பட்டனர்.  மரிச்ஜாப்பி படுகொலையில் உயிர்பிழைத்த சில அகதிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்வரை இருக்கக்கூடும் என்று கூறும்பொழுது அரசாங்க அதிகாரிகளோ இந்த எண்ணிக்கை பத்துக்கும் குறைவானது என்றே வலியுறுத்துகின்றனர். இத்தனை மக்களும் அத்தீவிலிருந்து எப்படி மறைந்தார்கள்? சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிக மோசமான வன்முறை ஒன்றைக் குறித்த உண்மை விபரங்களை எவ்வாறு மீட்டெடுப்பது? பத்திரிகையாளர் தீப் ஹல்தர் 1979-ஆம் ஆண்டு நடந்த படுகொலையின் புதைக்கப்பட்ட வரலாற்றை அதில் தப்பிப்பிழைத்தவர்கள், அப்போதைய பத்திரிகையாளர்கள், அரசாங்க அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்களை நேர்காணல் புரிந்து அவ்வரலாற்றை தைரியமாகவும், நேர்மையாகவும், பரிவுடனும் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.

    வகை : வரலாறு

    பக்கங்கள் 168  ரூ200


     

    200.00
  • செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்

    499.00
    Add to cart Buy now

    செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்

    செங்கிஸ்கானும்
    நவீன உலகின் உருவாக்கமும்
    ஜேக் வெதர்ஃபோர்ட்
    400 ஆண்டுகளில் ரோமானியப் பேரரசு பெற்ற வெற்றியை 25 ஆண்டுகளில் பெற்றுவிட்ட மங்கோலியப் பேரரசின் சரிதத்தை, செங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாற்றினூடே சித்தரிக்கின்றது இந்நூல். நவீன உலக வடிவமைப்புக்கான மூன்று புத்தாக்கங்களாக இருந்துள்ள அச்சிடும் கருவி, வெடிமருந்து, திசைமானி இம்மூன்றும் மங்கோலியப் பேரரசு மூலம் கிடைத்தவை. அய்ரோப்பாவின் கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் மங்கோலியப் படையெடுப்புகள் என்னும் அய்ரோப்பியரின் வாதத்தை நிராகரிக்கிறார் ஜேக் வெதர் ஃபோர்ட்.

    தமிழில்: சா. தேவதாஸ்
    வகை : வரலாறு


    பக்கங்கள்  424  ரூ499


    499.00
  • நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்

    499.00
    Add to cart Buy now

    நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்

    நகைக்கத்தக்கதல்ல
    அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்
    1932- 1956

    இவ்வரலாறு, வேறெதனையும் போலின்றி, நீங்கள் நகைத்துக் கொண்டிருப்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
     
    1949இல் நத்தையில் சவாரி செய்யும் அம்பேத்கரை சாட்டையால் விளாசும் ஜவஹர்லால் நேருவை சித்தரிக்கும் சங்கரின் கேலிச் சித்திரம், பள்ளிப் பாட நூலில் சேர்க்கப்பட்டிருந்தது தலித் எதிர்ப்பை கிளப்பிற்று. கலையின் சுதந்திரம் என்ற ரீதியில் சவர்ணர்கள் எதிர்வினையாற்றினார்.அப்போது ஆய்வு மாணவரும் கேலிச்சித்திரருமான உண்ணாமதி சியாமா சுந்தர், ஆங்கில மொழி அச்சுப் பதிப்புகளில் வெளியாகியுள்ள, அம்பேத்கர் குறித்த கேலிச் சித்திரங்களை ஆவண காப்பகங்களில் தேடிச் சேகரித்தார். சங்கர்,என்வர் அகமத், ஆர்.கே. லட்சுமண் உள்ளிட்டவர்கள் வரைந்து, இந்தியாவின் முன்னணி பிரசுரங்களில் வெளியாகியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேலிச்சித்திரங்கள், அம்பேத்கர் மீதான வக்கிரமானதும் சிந்தனையற்றதுமான காழ்ப்புணர்வை அப்பட்டமாக்கியிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு கேலிச்சித்திரத்துடன் இணைந்துள்ள கடுமையான விமர்சனக்குறிப்பு,வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டவரின் அசலான வாழ்க்கை வரலாற்றினை முன்வைக்கிறது.
    இதற்கு முன் நாம் பார்த்திராத பாபாசாகிபை இந்நூல் நமக்கு வழங்குகிறது – விஜேத குமார்

    தெரிவும் தொகுப்பும் : உண்ணாமதி சியாம சுந்தர்
    தமிழில் : சா. தேவதாஸ்
    வகை : வரலாறு

    பக்கங்கள்  416  ரூ499

    499.00
  • சாதியைப் பேசத்தான் வேண்டும்

    450.00
    Add to cart Buy now

    சாதியைப் பேசத்தான் வேண்டும்

    சாதியைப் பேசத்தான் வேண்டும்
    சூரஜ் யங்டே
    இந்திய தலித் இளைய தலைமுறையினரிடையே ‘ஒரு புதிய குரல் தோன்றியிருக்கிறது’. – பார்த்தா சட்டர்ஜி
    முதல் தலைமுறை தலித் அறிஞரான சூரஜ் யங்டே அழுத்தமான உணர்ச்சிகளைத் தூண்டும் இந்தப் புத்தகத்தின் வழியே ஆழமான சாதிய நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதோடு அவற்றின் குழப்ப முடிச்சுகளையும் அவிழ்க்கிறார். தலித் குடியிருப்பில் வளர்ந்த அவர் நெஞ்சைப் பதற வைக்கும் பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அன்றாட வாழ்வின் வலிகளையும் துன்பங்களையும் அன்பு மற்றும் நம்பிக்கையால் தாம் மீட்டெடுத்ததை விவரிக்கிறார். அரசியல், அதிகாரத்துவம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் நிலைகொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத சுவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்.
    தலித் சமுதாயத்தினரிடையேயான உட்- சாதிப் பிரிவுகள், பிளவுகள், உயரடுக்கு தலித்துகளின் நடத்தை மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட நவீன-உலகின் தீண்டாமை போன்றவற்றைத் தைரியமாக, நேர்மையாக முன்வைக்கிறார் – அவை அனைத்தும் பிராமணீய கோட்பாடுகளின் தவிர்க்க இயலா செல்வாக்கின் கீழ் இயங்குகின்றன.
    தமிழில் : அனிதா பொன்னீலன்
    வகை : கட்டுரை
    பக்கங்கள் 384  ரூ450

    450.00
  • பேரரசன் அசோகன்

    பேரரசன் அசோகன்

    550.00
    Add to cart Buy now

    பேரரசன் அசோகன்

    .

    சார்ல்ஸ் ஆலன்

     

     

    கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு … இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.அசோகரது வரலாற்றை சார்ல்ஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து, மறைந்து போன மன்னனை மீட்டெடுக்கிறார்.

    தமிழில் : தருமி

     

    ரூ550

    550.00
  • அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    180.00
    Add to cart Buy now

    அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

    .
     

    ஏ எஸ் கே

     

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்மவெறியர்கள் எங்குப்பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

    டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.

    ரூ180

    180.00
  • மதங்களும் சில விவாதங்களும் 

    மதங்களும் சில விவாதங்களும் 

    250.00
    Add to cart Buy now

    மதங்களும் சில விவாதங்களும் 

    .
     
    தருமி
    மத நம்பிக்கைகள்  பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள்
    சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’
    வழியே பார்த்துத்தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே ‘பாவம்’ என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது
    வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது
    ‘நம்பிக்கைகள்’ பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின்  மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.
    இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை,வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞர்களுக்கேஉரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.
    ரூ250
    250.00
  • நிழல் ராணுவங்கள் 

    நிழல் ராணுவங்கள் 

    230.00
    Add to cart Buy now

    நிழல் ராணுவங்கள் 

    .

    திரேந்திர கே ஜா

     

    “வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்” –தி இந்து

    “நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்” – வையர்

     

    தமிழில் : இ. ப. சிந்தன்

    ரூ230

    230.00
  • இந்தியா ஏமாற்றப்படுகிறது

    இந்தியா ஏமாற்றப்படுகிறது

    320.00
    Add to cart Buy now

    இந்தியா ஏமாற்றப்படுகிறது

    .

    தொகுப்பு
    பிரதீக் சின்ஹா / டாக்ட ர் சுமையா ஷேக் / அர்ஜூன் சித்தார்த்

     

    அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன.

    “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.

    தமிழில் : இ பா  சிந்தன்
    ரூ320
    320.00
  • பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

    பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

    350.00
    Add to cart Buy now

    பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

    .

    .

    ரொமிலா தாப்பர்

     

    பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்
    உடனிகழ்காலக் கடந்த காலங்கள்

    மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பண்பாட்டு கருத்தமைவு குறித்த வரையறைகள் எப்படி மாறியுள்ளன என்று விளக்கி, கூடுதல் கவனம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் தாப்பர். கடந்த காலத்தின் சிந்தனைகள் மற்றும் தேர்ந்தெடுத்த இனங்களால் பண்பாடுகள் வரையறுக்கப்படுகையில், ஒருசில தவிர்த்து ஒப்பீட்டளவில் அறியப்படாதவனவாகவே உள்ளன. இருப்பினும் கடந்த காலத்துடன் தொடர்பு படுத்துவதிலும் உடனிகழ்கால இருப்பு என்றவகையில் அவற்றின் முக்கியத்துவத்திலும், ஒவ்வொன்றும் ஒரு சூழலையும் அர்த்தத்தையும் பெற்றுள்ளன. பண்பாட்டுடன் தொடர்பற்றதாகப் பெரிதும் கருதப்படும் சூழல்கள், எதிரான வகையில் தெளிவுப்படுத்தக் கூடியனவாக இருக்க முடியும். பண்பாடுகளை அடையாளப்படுத்தும் பொருட்களிலிருந்து, சமூகப் பாகுபாடு, பெண்களின் பாத்திரம், அறிவியல் – அறிவின்பாலான அணுகுமுறைகள் போன்ற பண்பாடுகளை வடிவமைக்கும் கருத்துகள் வரை இவற்றில் சிலவற்றை தாப்பர் தொட்டுச் செல்கிறார். சிந்தனையைத் தூண்டும் இதுபோன்ற புத்தகங்கள் விவாதத்தைக் கிளப்பும்; இந்தியாவின் பண்பாடு குறித்த நடப்பு மூட மரபுகள் சிலவற்றை ஓய்ந்துபோகச் செய்யும்.

     

    தமிழில் : சா  தேவதாஸ்

    ரூ350
    350.00
  • இந்தியாவில் சாதிகள்

    இந்தியாவில் சாதிகள்

    150.00
    Add to cart Buy now

    இந்தியாவில் சாதிகள்

    .

    .

    டாக்டர் அம்பேத்கர்

    உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.

     

    B R Ambethkar / Ambedkar

    ரூ150

    150.00
  • ஆதி இந்தியர்கள்

    ஆதி இந்தியர்கள்

    399.00
    Add to cart Buy now

    ஆதி இந்தியர்கள்

    ஆதி இந்தியர்கள்
    டோனி ஜோசஃப்

     

    இந்தியர்களாகிய நாம் யார்?
    நாம் எங்கிருந்து வந்தோம்?

    நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, கடும் சவால்களின் ஊடே முதன்முதலாக இந்தியாவை வந்தடைந்ததிலிருந்து அக்கதை தொடங்கிறது. அதற்குப் பிறகு, கி.மு. 7000க்கும் கி.மு. 3000க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஈரானிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் இங்கு வந்து குடியேறுகின்றனர். பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இங்கு நுழைகின்றனர்.

    தொல்லியல், மரபியல், வரலாறு, மொழியியல், கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், டோனி ஜோசஃப் நம்முடைய கடந்தகாலத்தைப் படிப்படியாகத் திரைவிலக்கும்போது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய, மிகவும் சர்ச்சைக்குள்ளான, அசௌகரியமான பல கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார். அவற்றில் சில:

    • சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார்?

    • ஆரியர்கள் உண்மையிலேயே வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்களா?

    • மரபியல்ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா?

    மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல், நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடனும் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு, நாம் யார் என்பது குறித்த மறுக்க முடியாத முக்கியமான உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது. அந்த உண்மை இதுதான்:
    நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தாம்!

    நாம் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

     

    எழுத்தாளர் பற்றி:

    ‘பிசினஸ் வேர்ல்டு’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான டோனி ஜோசஃப், முன்னணி தினசரிகள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இந்தியாவின் தொல்வரலாறு குறித்து வலுவான தாக்கம் ஏற்படுத்தியுள்ள பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.

    Awards received by this book:
    • Best non-fiction books of the decade (2010-2019) – The Hindu
    • Book of the Year Award (non-fiction), Tata Literature Live, 2019 – The Wire
    • Shakti Bhatt First Book Prize 2019 – The Indian Express
    • Atta Galatta Award for best Non-Fiction, 2019 – Deccan Herald
    • One of the 10 Best New Prehistory Books To Read In 2020, as identified by Book Authority

    Tony Joseph / Athi Indiayarkal / Indiyar / Adi Dravidar / Adi Indiyarkal

    பக்கங்கள் 284  விலை ரூ 399

    399.00
  • சேப்பியன்ஸ்

    சேப்பியன்ஸ்

    599.00
    Add to cart Buy now

    சேப்பியன்ஸ்

    யுவால் நோவா ஹராரி

     

    இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
    நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:

    • மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.

    • வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.

    • தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.

    வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.
    அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!

     

    ‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு’

    சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் தமிழில்

     

    எழுத்தாளர் பற்றி:

    முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.

    Sapience / Sapians Sabiens Chapiens / Sabians / Sapience

    பக்கங்கள் 512   விலை ரூ 599

    599.00