Tamil - Fiction

Showing all 12 results

Show Grid/List of >5/50/All>>
  • டைகரிஸ்

    டைகரிஸ்

    500.00
    Add to cart Buy now

    டைகரிஸ்

    டைகரிஸ்
    ச. பாலமுருகன்
    இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம்வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
    வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என்ற ஒற்றை அடைமொழி மட்டுமே தரப்பட்டது. அந்த அடையாளம் வெள்ளையர்களுக்கானது. இந்தியர்கள் அதில் அடங்கவில்லை. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல ஏதோ ஒரு வகையில் நம் நினைவுகளிலிருந்தும் அந்த பங்களிப்பை நீக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏறக்குறைய அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
    போரிலிருந்து திரும்பியவர்களுக்கு உரிய அங்கீகாரம், உதவிகள் கூட மறுக்கப்பட்டது. போர் முடிந்த பின்பு போர்களத்தில் இறந்தவர்களின் கல்லறைகள், சவக் குழிகள் தோண்டி எடுக்கப்பட்டது. மீண்டும் மரியாதையுடன் மறு புதைப்பு நடத்தப்பட்டது. அந்த மரியாதை கூட இந்திய படை வீரர்களுக்கு கிடைக்கவில்லை.
    போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடாகவும் தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது. எல்லாக் காலத்திலும் அவைகள் ஒன்று போலவே உள்ளன. ஆனால் களம் வேறு வகையான காட்சிகளைக் காட்டுகிறது. போருக்குப் போய் வந்தவனிடம் கடைசியாக எஞ்சி நிற்கும் கேள்வி போர் என்பது எதற்காக என்பதுதான். அன்றைய மெசபடோமியா என்ற இன்றைய ஈராக்கில் பாயும் டைகரிஸ் எனும் நதி அந்தப் பெரும் போரின் சாட்சியமாய் வாழ்ந்து பாய்கின்றது. அவள் ஆயிரக்கணக்கான இந்திய போர் வீரர்கள் மற்றும் கணக்கில் வைக்கப்படாத தொழிலாளர்கள் என்று கிராமத்திலிருந்து போரின் போது உடன் இருந்த இந்தியக் கூலிகளின் கதைகளை அறிந்தவள். சலசலக்கும் அந்த டைகரிஸ் நதியின் ஓசையில் அந்த கதைகளை நீங்கள் கேட்கக் கூடும்.
    ரூ 550
    500.00
  • யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

    900.00
    Add to cart Buy now

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது
    ஹெமிக்வே

     

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னஸ்ட் ஹெமிக்வே எழுதிய மிக புகழ் பெற்ற புதினம் ஆகும்.
    இது சர்வதேச படைஅணியை சேர்ந்த ‘ராபர்ட் ஜோர்டான்’ என்கிற இளம் அமெரிக்க இளைஞனின் கதையை சொல்லி செல்கிறது. இப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது குடியரசு கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டது.
    செகோவிய நகரம் மீது அமைந்துள்ள ஒரு பாலத்தை தாக்குதல் நடத்தி அழிக்க கூடிய பொறுப்பு அவனிடம் தரப்படுகிறது.
    ஹெமிங்க்வேயின் படைப்புகளிலேயே மிக சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய ‘ஜெப்ப்ரே மேர்ஸ்’ இந் நாவலை பற்றி குறிப்பிடுகிறார்.
    YARUKKAKA INTHA MANI OLIKKIRATHU
    தமிழில் : சி சீனிவாசன்
    ரூ 900
    900.00
  • வாக்குறுதி

    வாக்குறுதி

    499.00
    Add to cart Buy now

    வாக்குறுதி

    வாக்குறுதி
    நவீன சீனாவில் காதலும் இழப்பும்

    சின்ரன்

    ”ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.”
    – நியூயார்க் டைம்ஸ்

    ”சின்ரன் மிக அற்புதமான கதைசொல்லி, ’வாக்குறுதி’ நம்மை ஆட்கொள்ளக்கூடிய சிறப்பானதொரு நூல்.”
    – வாஷிங்டன் புக் ரிவ்யூ

    ”தொலைந்துபோன தலைமுறையின் குறிப்புகளை மீட்டெடுத்து வரலாற்றுப் பதிவாக்கியுள்ள பிரமாதமான நூல்.”
    – கிர்கஸ் ரிவ்யூ

    தமிழில் : சசிகலா பாபு

    ரூ : 499
    499.00
  • மயில் புராணம்

    மயில் புராணம்

    270.00
    Add to cart Buy now

    மயில் புராணம்

    மயில் புராணம்
    பாகிஸ்தானிய சிறுகதைகள்

     

     

    இந்த்ஜார் ஹுசைன்

    இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை ‘கனவுகளின் வியாபாரி’ என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் ‘கனவுகளின் வியாபாரி’ அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ‘தன்வந்தரி’ என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.

    தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் மகாபாரதம், புத்த, சமண நூல்களை நன்கு கற்றரிந்தவர். அவர் கதைகளில் அதைக் காணலாம். இதுபோன்ற படைப்புகளே உலகத்தைச் சுருக்கி நம் கனவுகளையும் அனுபவங்களையும் விரிவடையச் செய்பவை.

    தமிழில் : கே. நல்லதம்பி

    ரூ: 270
    270.00
  • ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்

    ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்

    160.00
    Add to cart Buy now

    ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்

    ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்
    அராபிய பெண்ணியச் சிறுகதைகள்
    மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல், கல்வி, பணி மற்றும் சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. எதிர் பாலினங்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆராய்வதோடு வழமையான பண்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன. இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

    தொகுப்பும் மொழியாக்கமும் : ஜான்சி ராணி

    ரூ: 160
    160.00
  • லிபரேட்டுகள் - பாகம் 1

    லிபரேட்டுகள் – பாகம் 1

    120.00
    Add to cart Buy now

    லிபரேட்டுகள் – பாகம் 1

    லிபரேட்டுகள் – பாகம் 1
    தரணி ராசேந்திரன்

    அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். மூன்று நான்கு மணிநேரம் சுற்றி அலைந்தும் அவனால் எந்த ஒரு பெரிய விலங்கையும் சுட்டுக் கொல்ல முடியவில்லை. சுரங்கத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு வேலை பார்த்த அடிமைகளில் வயதானவர்களில் பத்து பேர்களைப் பிடித்து வரச்சொல்லி அவர்களை சுட்டுக்கொன்று ஆவேசத்துடன் கத்திக் கூச்சலெழுப்பினான். அன்று இரவு ஆப்பிரிக்கா, ஆசிய அடிமைப் பெண்களை இழுத்துவரச் சொல்லி அவன் ஆட்களை விட்டுப் புணரச்செய்து அதைப் பார்த்து ரசித்தான். பெரிய வாள் கொண்டு புணரப்பட்ட அடிமைகளின் பிறப்புறுப்பு, பிட்டம், மார்பு, முகம், தலை என அவன் உடல் சோர்வுறும் வரை வெட்டி வீசினான்.

    ரூ : 120
    120.00
  • காஃப்கா – கடற்கரையில்

    காஃப்கா – கடற்கரையில்

    900.00
    Add to cart Buy now

    காஃப்கா – கடற்கரையில்

    காஃப்கா – கடற்கரையில்
    ஹருகி முரகாமி

    தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.

    முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.

    இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.

    தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

    ரூ : 900
    900.00
  • இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    250.00
    Add to cart Buy now

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்
    அலெக்சாண்டர் சோல்செனிட்சின்

    ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது.

    இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்படும் நாயகன், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பிவந்துவிடுகிறான். ரஷ்ய ராணுவமோ அவனை நம்பமறுக்கிறது. உளவாளி என முத்திரை குத்தி சிறையில் அடைத்துவிடுகிறது.

    சிறப்பு முகாமின் ஒரு நாளை விவரிப்பதன் மூலம், அங்கு நடக்கும் ஊழல்கள், சிறைவாழ்வின் பரிதாபங்கள், அடக்குமுறைகள் என அனைத்தையுமே காட்சிப்படுத்திவிடுகிறார் அலெக்ஸாண்டர் ஜோல்செனிட்சின்.

    தமிழில் : க.சுப்பிரமணியன்
    ரூ : 250
    250.00
  • வேர்கள் 

    வேர்கள் 

    1,500.00
    Add to cart Buy now

    வேர்கள் 

    வேர்கள் 
    அலெக்ஸ் ஹேலி

    ‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு.

    1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.

    தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்

    Verkal / Vergal 

    பக்கங்கள் 910  ரூ1500


    1,500.00
  • ஆடு ஜீவிதம்

    ஆடு ஜீவிதம்

    270.00
    Add to cart Buy now

    ஆடு ஜீவிதம்

    .
    ஆடு ஜீவிதம்
     
    பென்யாமின்

     

    நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி   பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான   குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர்   ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

    மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய   எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின்,  நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

    2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்

    Benyamin

    தமிழில் : விலாசினி

    ரூ270

    270.00
  • ஆரிஜின்

    ஆரிஜின்

    750.00
    Add to cart Buy now

    ஆரிஜின்

    .

    டான் பிரவுன்

     

    நாம்  எங்கிருந்து வந்தோம்?
    நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

    தமிழில் : இரா  செந்தில்

    ரூ750

    750.00
  • டா வின்சி கோட் 

    டா வின்சி கோட் 

    699.00
    Add to cart Buy now

    டா வின்சி கோட் 

    .

    டான் பிரவுன்

     

    சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு. – பீப்பிள் மேகஸின்

    இது ஒரு  முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர். – நெல்ஸன் டெமில்

    திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. – தி டென்வர் போஸ்ட்

     

    தமிழில் : பெரு முருகன்,  இரா செந்தில்

     
    ரூ699
    699.00