harari tamil
Showing the single result
-
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
₹450.00 Add to cart Buy now21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
யுவால் நோவா ஹராரி
நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக் கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா?அல்லது நம்முடை யகண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றவா?
இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இதுபோன்ற மிகமுக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப்பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.
நம்மை நிலை தடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர் கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
உலகப் புகழ்பெற்ற நூலாசிரியரும் வரலாற்றியலாளருமான யுவால் நோவா ஹராரி,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் ஒரு முனைவர் பட்டம்பெற்றவர். அவர் தற்போது ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக ப்பணியாற்றிவருகிறார்.
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, ஹோமோடியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார் யுவால் நோவா ஹராரி.
21 Am Nootrandukkana 21 Padangal / 21 am Nutrandukkana 21 Padankal
பக்கங்கள் 416 விலை ரூ450
₹450.00